பரிகாசக் காற்றே 17
காற்றே உன்னால்......
மேகம் அவள் மேனி குளிர்ந்து
நீர் திவளை ஆகிவிட்டாள்
தாகம் கொண்ட என் நெஞ்சை
தணிப்பதற்கோ
மேல் சுரந்து பனிக் கின்றாள்....
மோகம் கொண்ட முகம் மறைத்தேன்
உன் காட்டம் துணைக் கொண்டு
முந்தானையையும் களவாடிவிட்டாள்
வெட்கத்தில் முகம் கவிழ்ந்தால்
பக்கம் சூழ்ந்து நகைக்கின்றாள்
அவள் தோழமை அழகு இது தானோ?
கவிதாயினி அமுதா பொற்கொடி