கனிந்த காதல்
நரைமுடிக் கூந்தல்
அலைபுரையின் அழகு
குழி விழுந்தக் கன்னம் - நீ
ஆழி மதுக் கிண்ணம்
பல் உதிர்ந்த பவளவாய்
சொல் உதிர்க்கும் மதுரம்
புரை படர்ந்த பார்வை - நீ
கரைய வைக்கும் பாவை
கூன் வளைந்த முதுகு
வான் பிறையின் அழகு
ஒலி நுகரா செவி - நீ
கவி படைக்கும் சிவி
சிட்டாக துள்ளித்திரிந்தாய்
சிறை எடுத்தேன் உன்னை
பட்டுச் சுருங்கினாலும்.....என்
பாதைத் தொடரும் உன்னை .