சாலையில் ஒரு சோலை மரித்தது

சாலையில் சோலையாய் இருந்தேன் காலையில்
மரித்துப் போனேன். மாலை வேளையில்
அனைத்து உயிர்களின் அரவணைப்பு நான்
கவிபாடும் குயிலும் கீச்சிடும் குருவியும்
கிளைத்தாவும் குரங்கும் விளையாடும் அணிலும்
இன்ன பிறவும் என்னுயிர்த் தோழர்கள்.

பறவையெலாம் ஒளிந்தாட என்னுடல் நாடும்
கால்நடைக்கும் நான் துணை யானேன்
என் காலதில் மேனிதனைத் தேயத்தாடும்
வயலில் உழைத்த அவனும் வருவான்
என்மடி தேடி, இளைப்பாற அமைதியாய்!
குட்டித் தூக்கத்தின் கூடாரமாய் நான்

காய் கொடுத்தேன் கனி கொடுத்தேன்
களைப்பாற நானுமக்கு நிழற் கொடுத்தேன்
ஆடு மாடிற்கோ தழை கொடுத்தேன்
என்னுடல் அசைத்து மழையது வேண்டி
நான் உமக்கு அளித்து மகிழ்ந்தேன்.
மிகு இடந்தனில் நானே இறையுமாய்

கதிரவன் கதிரி லுடல்சோர்ந்த நீ
எனைக் கடக்கையிலே களிப்பு கொண்டாய்
வெயிலது காத்துமக்கு குடையாய் நின்றோம்
இத்துனைக் கொடுத்தும் பயன் இலா
என்னுயிர் தோழர் பலரின் குடியழித்து
நீர் வண்டியியக்க வழி அமைத்தாய்

வளர்ந்த என்னை காக்க ஆளிலா
அழிக்க வருகிறான் அயலூரி லிருந்து.
பிறப்பிலே வேற்றுமை கொண்டவன் நான்.
பிறந்து புதைபடவில்லை. பின், மாறாக
புதைந்து பிறந்தேன் இவ்வுலகில் நான்
புதைந்த என்னை அகழ்ந் தெடுத்து
என்னுயிரை பலகூறாக பிளந் தெடுத்து
என்னுயிர் நரம்பெல்லாம் படபடத்து
ஆவி அடங்கி போனது துடிதுடித்து.

என்மடி இளைப் பாறிய எவரும்
வரவிலா என்னுயிர் போ நேரம்
என் இனத்தை அழித்து உன்
இனத்தை வளர்த்தால் ஒரு நாள்
உன்னினம் அழியும் என்னின மில்லாமல்.
அவ்வேளை புரியும் எம்மினத்தின் அருமை!

எழுதியவர் : செல்வா.மு (11-Dec-15, 10:36 pm)
பார்வை : 540

மேலே