கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ்

நாமெல்லாம் நலமோடு நல்வாழ்கை வாழ
நானிலத்தில் அவதரித்து நல்வாக்கு கூற
நல்மங்கை ஈன்றெடுத்த நல்மகவை பாட
நாடெல்லாம் கொண்டாடும் நாள் இதுவே
பசுமரத்தணிபோல் பாமரர் மனதில் உறைந்து
பார் எங்கும் பார்த்திருக்க பசுக்கொட்டிலில் பிறந்து
புனிதவழிபாட்டின் நாயகனாம் இயேசுதனை
தூய்மையுடன் துதிப்போம் துயர் மறந்தே
பூக்களுடன் புத்தாடையணிந்து இத்திருநாளினிலே..

எழுதியவர் : kayennr (11-Dec-15, 10:46 pm)
பார்வை : 76

மேலே