விடியல் - துகிருஷ்ணமூர்த்தி
அன்று....
நிலம் பிரித்து திணை படைத்தான்.
வினை மிகுத்து விதி வகுத்தான்.
நீர் ஆண்டு அணை கண்டான்.
வயல் கொண்டு வளம் மிகுத்தான்
நலம் பரப்ப வரி வகுத்தான்.
வளி ஆண்டு கடல் கடந்தான்
தரணி இணைத்து தமிழுரைத்தான்
நுனி விரல் கொண்டு சிலை தந்தான்.
மொழி கொண்டு நூல் தந்தான்.
மறம் ஏற்று வெற்றி யுற்றான்.
மதம் ஏற்று அறம் உரைத்தான்.
களம் புகுந்து புலம் பெற்றான்.
இன்று....
வயல் பிரித்து நிலம் பெற்றான்.
வினை மறந்து மதி சிறுத்தான்.
மரம் கழித்து மழை இழந்தான்
இலவசத்தால் இனம் மறந்தான்.
தரங்கெட்ட தலைமை கொண்டான்.
தரணி எங்கும் உதைபட்டான்.
மறம் குற்று மனம் சிதைந்தான்.
அறம் மறந்து அல்லலுற்றான்..
வெறுப்பு கொண்டது உணர்ந்திட்டான்.
சிறப்பு எதுவென்று தெளிந்திட்டான்.
சீரிய சிந்தனையால் பிரித்திட்டான்.
வீரியங்கொண்டு எழுந்திட்டான்.
ஏமாற்று அரசியலனை விலக்கிட்டான்.
ஒருமாற்று பாதைக்கு வித்திட்டான்.
விடியல் வேண்டியே விழித்திட்டான்.
வீதியில் இற்ங்கியே உழைத்திட்டான்.
தொடரவேண்டும் இவ்வுணர்வு,
இடரமுயலும் நரிக்கூட்டம்.
இரையாகாதீர் உணர்வுற்றோர்.
சீற்றம் மிகுந்தோரே செயல்படுவீர்.
ஏற்றம் காணும்வரை இயங்கிடுவீர்.