காதல் நிசதி

பக்கம் பக்கமாய் உன்னை படித்தேன்
பகுதி பகுதியாய் என்னை தொலைத்தேன்...
பாசத்தினால் அடிவருடியாகி அசதியானேன்
பார்வையினால் அவஸ்தையாகி அடிமையானேன்..
அமாவாசை இருளிலும் உன்னையறிவேன்
ஆயிரம் மைல் தொலைவிலும் உன்னை தேடி வருவேன்...
உன் தேகம் நனைக்கும் தென்றலதனை மெச்சுவேன்
உன் சுவாசக்காற்றினை அள்ளிவர கெஞ்சுவேன்...
மறு ஜென்மம் ஒன்றிருந்தால் அங்கும் நீ என் காதலியாக வேண்டும்
என் ஒட்டுமொத்த கவிதைக்கும் சொந்தக்காரியாக வேண்டும்..
என் உலகப்பந்து உன் மூச்சுக்காற்றில் மட்டும் நிறைந்திருக்க
நீயும் நானும் நிதர்சனமாய் இருந்து நிசதி காதலிக்க வேண்டும்..