கடமைச் செய்யும் காலங்கள்

நாம் குழந்தையாய்
தவழ்ந்தது ஒரு காலம்!!
தாயின் கைபிடித்து
நடைபயின்றது ஒரு காலம்!!!
சிறுமியாய் மாறி
சிறகடித்து பறந்தது
ஒரு காலம்!!
பருவப் பெண்ணாய் மாறி
பள்ளி சென்றது ஒரு காலம்!!!
கன்னிப் பெண்ணாக
கல்லூரியில் காலூன்றியது
ஒரு காலம்!!
புதுமணப் பெண்ணாய்
இல்லற வாழ்வில்
அடியெடுத்து வைப்பதும்
ஒரு காலம் !!!
இல்லறத்தை மேலும்
இன்புறச் செய்ய
இனிய தாய்மைக்
கோலம் எடுப்பதும்
ஒரு காலம்!!
பெற்றெடுத்த சிசுவைப்
பேணிக் காக்க
பெரியோராய் மாறுவது
ஒரு காலம் !!!
குடும்பச் சுமையை
சுமை என்று கருதாமல்
குணமுடன் ஏற்று
பெற்றோரை மகிழ்விப்பது
ஒரு காலம்!!
செய்யும் வேலைகளில்
பொறுப்புடன் நடந்து
நற்பெயர் பெறுவது
ஒரு காலம்!!
முதியோரை போற்றி
அவர்களின் சொல்லுக்கு
கீழ்படிந்து தம் பிள்ளைக்கு
மாதிரியாய் விளங்குவது
ஒரு காலம்!!
முதுமையை வரவேற்று
நம் வாழ்விற்கு
முற்றுப் புள்ளி
வைத்து இத்தனைக்
காலங்களைத் தந்த
கடவுளைத் துதித்து
நன்மைப் பெறுவது
மீதி காலம் !!
நாம் ஒவ்வொரு
காலங்களையும் இனிதே
கடப்பது கடவுளின் செயல் !
இவை ஒன்றில் தவறினாலும்
அனைத்து கடமைகளையும்
தவறியதற்கு சமம்!!
இத்தனைக் காலங்களை
கடப்பது என்பது - நம்
சுய பலத்தால் கூடாது !!
ஒருஒரு காலங்களையும்
கடந்தப் பின் நாம் திரும்பிப்
பார்க்கும் போது நம்மை
யாரோ சுமந்து வந்தது
தெரியும்!!! - அது தான்
இறைவனின் அன்பு .

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (12-Dec-15, 6:40 pm)
பார்வை : 93

மேலே