இறந்திறந்து பிறந்து

* * * * * * * * * * * * * * * * *
என்னை நுகர்ந்து
நகர்ந்த நொடிகளை
என் நாடி இளைக்க - ஏன்
நசித்துப் புசிக்கிறாய்

விகல்ப நினைவுகளை
விளைவித்து
அறுவடைத்து - ஏன்
விலகிப் போனாய்

உன் இடது பக்க மார்பிலே
சற்று மெதுவாக
காது வைக்க எத்தனி - நான்
துடிப்பது கேட்கும்

பிரளயமற்றுப் போன
சுவாச நாடி
எப்போதாவது
பொய் சொல்லுமா

மூச்சுத் திணறி
என்னை உள்ளிழுத்து
வெளித்தள்ளும்
உன் நாமத்தை

எல்லோரும் பிறந்து
பிறந்து இறப்பார்கள்
நானோ இறந்திறந்து
பிறந்து கொண்டிருக்கிறேன்

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (13-Dec-15, 5:07 am)
பார்வை : 674

மேலே