கனவு பெண்கள்
கனவு பெண்கள்
அழகான பெண்களாகவே
வருவார்கள் கனவில்
ஏறக்குறைய எல்லாருக்கும்
காதலியின் முகச்சாயல்களே
அழும் வேளையில்
மார்பில் சாய்த்துகொள்ளுதல்
முத்தம் கேட்டால்
எடுத்துகொள் என்பதைபோல்
இமைகளை மூடுதல்
மழைக்கால நேரத்தில்
வார்த்தைகளற்று அருகாமையில்
நிற்கும் நெருக்கம்
கையலாகத தனத்தையெல்லாம்
நிறைவேற்றிகொள்ளலாம் கனவில்
என்னென்ன எதிர்பார்க்கிறமோ
அத்தனைக்கும் இடமளிப்பார்கள்
கனவு பெண்கள்
குறிப்பாக தெருமுக்கில்
காத்திருப்பவனை
யாரோ ஒருவனைப்போல்
கடந்துசெல்ல மாட்டார்கள்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
