நானும் எனக்கும் யாதுமானவளும் - உதயா

ஒரே அலைவரிசையில்
பயணங்கள் இருந்த
என் கரிசல் காட்டுக்குள்

அவள் பார்வைச் சாரல்
வெகுவாக விழுந்ததில்
வெறுமைக் கொண்டது
என் நிகழ்கணங்கள்...!

காற்றின் பணிதனை
எதிர்மறையாக சுமர்ந்துக்கொண்டு
நிழலாகவே மாறிக்கிடக்கிறேன்

நிலவின் உறக்கம் முதல்
பரிதியின் உறக்கம் வரை
அவள் பாதச் சுவடுகளை
பின்னோக்கி தள்ளியவாறே...!

இரவின் பொழுகளில்
கனவுதனில் வளம் வரும்
கதாப்பாத்திரங்கள் அழுகிறது

அவைகள் கனவுதேசத்தில் புகுந்து
பல இரவுகள் ஆனதால்
அவற்றின் அலங்காரப் பொருட்களெல்லாம்
வெளுத்து வீணாகிறது என்று...!

நான் கதவைத்தான்
தட்ட நினைத்து
மெதுவாக நெருங்கினேன்

அதற்குள்
கூரையின் மேற்பரப்பை
கதவுயென திறந்து - என்னை
அணைத்துக் கொண்டது காதல்...!

உறவுகளின் வரிசையில்
அவளை ஒவ்வொன்றாக
பொருத்த முயல்கையில்

என்னையும்
தாய்மையடையச் செய்துவிட்டாள்
என் மடிதனில் படுத்துக்கொண்டு
கண்ணீரைச் சிந்தியவாறே...!

பாதைகளை குழப்பி
பயணத்தை தொலைத்து
கலக்கத்தில் விழுகையில்

குழப்பியதை வெட்டியெடுத்து
தலையாட்டி பொம்மைச்செய்து
தார் சாலைதனை கண்டெடுத்து
என்னை கார்தனில் ஏற்றிவிட்டாள்...!

சுடர்களின் சமவெளியில்
பனித் திவலைகளை
மேனியில் தைத்துக்கொண்டதில்

மெய்தனின் இறுக்கத்தில்
திசைகளை மறந்து திணறி
இதழ்களின் பிரிவில்
பெருமூச்சு விட்டது காற்று...!

அவள் வெட்கத்தை தொலைத்து
ஆசைதனை என்னிடமே விற்று
முத்தத்தை சேர்த்துக் கொண்டதில்

உதடுகளின் இடைவெளியில்
கசிந்து கிடந்தது
என் மனதினில் நிரம்பிக்கிடந்த
அழியா இரணங்கள்...!

என் மார்பின் ரோமங்களில்
அவளின் மூச்சுக் காற்று
ஓயாமல் படர்ந்த நொடிப்பொழுதில்

நானும் அவளும்
புவிவாழ்வு நிறைவு பெற்றதை
மனதார உணர்ந்து
உறைந்துக் கிடந்தோம்...!

எழுதியவர் : உதயா (13-Dec-15, 10:27 am)
பார்வை : 267

மேலே