முழுநேரக் காத்திருப்பு

* * * * * * * * *
உன் யௌவனம்
அந்த மலை முகட்டுச்
சாம்ராச்சியத்தின்
ஓடும் அருவி

உன் மென்மை
இன்று ஜனித்த சிசுவின்
உச்சமடைந்த
ஸ்பரிஸத்தின் தழுவல்

உன் காதல்
ஞானியையும் புலன் பெயர
ஜீவன் முழுதும் கொட்டிய
உன்னத ரசனை

உன் பக்குவ நேர்த்தி
புத்தனை போதிக்கும்
பௌவிய ஒளிக்கீற்றின்
பவுத்திரம்

உன் அழகு
வைகறை இருளில்
வெளித்தெரிந்து மறையும்
வண்ண நிலவு

உன் மௌனம்
அந்த கானகத்தின்
மையிருளில்
ஒலிக்கும் ஓசை

ஒரு கவிஞனின்
உணர்ச்சிகளுக்கு
கடிவாளமிட - நீ
காணாத கயிறு

என் இதய அடிவாரம்
நனைந்த படியே காத்திருக்கிறது
அந்த பசிய கொடியின்
பச்சைய வளர்ப்புக்காக. ....
* * * * * * * * *
-பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (13-Dec-15, 4:46 pm)
பார்வை : 128

மேலே