காதலும் காதல் பரிசும்

காதல் பரிசுத் தரவெண்ணி
நானும் காதல் போர்
புரிந்தேன் ; தோற்றேன் .
காதல் போரில் விழிகளின்
கணைகளை எதிர்த்து
வென்றவர் யார் ???


புருவமெனும் வில்லில்
பார்வை எனும் கணைத்தொடுத்துப்
பருவமெனும் களத்தில்
போர் தொடுத்து வெற்றிப் பெற்றால்
தோற்றத்தாய் அர்த்தம் .
தோற்று விட்டாலோ
வென்றதாய் அர்த்தம் .


வேந்தனின் கணைகள்
இரை கொடுக்கும் .
வீரனின் கணைகள்
புகழ் கொடுக்கும் ; சில
வீணரின் கணைகள்
உயிரெடுக்கும் ; விரோதக்
கணைகள் நட்பைக் கெடுக்கும் .
குரோதக் கணைகள்
வாழ்வை முடிக்கும் .


காதலர்களின் சின்னம் கரும்புவில்
மனத்தில் வழிபடும்
தெய்வமோ மன்மதன் . காதல்
பரிசாக அன்னத்தை அனுப்பிட
என் மனம் எண்ணியது ; அக்கணமே
அவ்வெண்ணம் கை விடப்பட்டது .
என்னவளே அன்ன நடையாள் அல்லவா ?


காதல் பரிசாகப் புறாவை
அனுப்பிட எண்ணியது என் மனம் .
சமாதானப் புறாவாய் அவளிருக்க
புறாவையும் புறக்கணித்தேன் .
என் கவிதையைப் பரிசாகத்
தரலாம் என்று நினைத்து
எழுத்துக்களை மாலையாக்கி
கொண்டிருந்தேன் . என் காதல்
வெறும் எழுத்துகள் என்று
நினைத்து விட்டால் நான்
என் செய்வேன் ? சொல்லுங்கள் .


என் இதயத்தை காதல் பரிசாகத்
தரலா மென்றால் என் இதயம்
இருப்பதோ அவளிடம் . என்
இதயத்தை இடம் மாற்றி இம்சை
ஏனடி செய்கின்றாய் ? சிந்தை
சிதறி இதயம் துடிககுத்தடி .


என் உயிரைக் கேட்டால் கூட
காதல் பரிசாக நான் தருவேன் .
உன்னுடன் பல்லாண்டுகள்
வாழவே ஆசைப் படுகிறேன் .
இறுதியில் என் நினைவுகளையே
காதல் பரிசாக்கி அனுப்புகிறேன் .
அது சொல்லும் நம் காதலின்
ஆழத்தை நொடிக்குநொடி .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (13-Dec-15, 8:59 pm)
பார்வை : 78

மேலே