பாலா

காதலின் மென்மையை
உண்மையாய் சொல்லி,
வாரிகுவித்தாய் வாழ்த்துக்கள் அள்ளி.
பகட்டு இல்லாத பகுத்தறிவாதியே,
உன்படம் சொல்லிடும் ஆயிரம் சேதியே,
தோற்றத்தில் எளிமை
வெண்திரையில் புதுமை உனது அடையாளம்.
மாற்றத்தைவிதைத்த மானிடா உனக்கு,
மாலையிடுமே வரும்காலம்.
உன்படைப்பில் அடைந்தாய் புகழின் உச்சம்.நீ,
பலகோடி இதயம் இளைப்பாரும் விருச்சம்.
நாமேகடவுள் என்ற தத்துவத்தை ஓதினாய்.
மூடப்பழக்கத்தை மூலையிலே வீசினாய்.
மௌனமே உன் மொழி,
நீ கண்டாய் புது வழி.
தரமான பல படங்கள் தந்திடு தோழா.
வரமாக இம்மண்ணில் பிறந்த எம் பாலா.

எழுதியவர் : கு.தமயந்தி (13-Dec-15, 8:06 pm)
Tanglish : BALA
பார்வை : 116

மேலே