ஆசான்

கல்லூரி காலமது
கரைந்தோடும் பருவமது
எண்ணி முடிக்கும் முன்னே
ஓடி போகும் நாட்களது!

கனவுகள் ஏந்திக் கல்லூரி வந்தோம்,
மேகத்தைப் போலே மிதந்து சென்றோம்!

தொலை தூரப் பயணத்தின்
முதர்ப்படியும் இதுதானே..
நல்வழியில் நான் செல்ல..
வழிகாட்டி ஆனாயே!

நல்லறிவும் கல்ல்வியையும்
அளவின்றி தந்தவனே..
முகம் காடும் கண்ணாடியாய்
என்னைப் பிரதிபலித்து நிற்பவனே!

செல்வத்தை நீ தந்திருந்தால்..
செலவழித்துத் தீர்த்திருப்போம்
நல்லறிவு தந்துவிட்டாய்..
எந்நாளும் உன்னை நினைப்போம்!

கருங்கல்லாய் இருந்த எம்மை,
சிற்பமாக நீ வடித்தாய்!!
உன் உளி தாங்கி நின்றதனால்..
இன்று ஊர் போற்றும் சிலையானோம்!
சிலை வடித்த சிற்பி உன்னை,
ஊர் மறந்து போய்விடலாம்;
நான் மறந்து போவேனோ?
என் படைப்பாளி நீ அன்றோ!?

தடுமாறும் வயதிதுவே..
நான் தவறு செய்யக்கூடிடுமே..
அன்புடனே அதைப் பொறுத்து..
ஆதரித்துத் துணை நிற்ப்பாய்!

நான் ஒளிற நீ உருகி
மெழுகாகி நின்றிருந்தாய்!!
என்னை ஏற்றி விட்ட ஏணி உன்னை
எந்நாளும் நினைத்திருபேன்!

கைம்மாறு கருதாமல்
கலங்கரையாய் நின்றவனே!
என்செய்து தீர்த்திடுவேன்..
உன்னிடத்தில் பெற்ற கடன்?

எழுதியவர் : நேதாஜி (13-Dec-15, 9:19 pm)
Tanglish : aasaan
பார்வை : 1556

மேலே