காகம்

கூவியழைக்கிறோம்
கூடி உண்ண
கவளம் வைக்கத்தான்
ஆளைக் காணோம்!

சாய்த்து…சாய்த்து
பார்க்கிறோம்
காணவில்லை
சாதிமத சார்பற்ற
சரித்திர தலைவர்களை!

ஏளனம் செய்யாதீர்
எங்களை…!
யாரையும் பிடிப்பதில்லை
”காக்கா”

கரைகிறோம்
காலையில்….
குரல் கேட்டும்
குறட்டையில்!

தேர்தல் நேரத்தில்
எங்கள் குரல்களும்
கரைந்திடும்.
அரசியல்வாதியின்
குரல்களாலே!

ஏமாறுகிறோம்
வாக்காளர்களைப் போல
ஏமாற்றும் குயில்களால்
கூவின பிறகுதானே!
எங்கள் இனமில்லையென!

எப்போது வருவான்
முண்டாசு கவிஞன்
மீண்டும் எங்களைப் பாட?

எங்களுக்கு இல்லையா?
சேவைக் கட்டணம்
சொல்கிறோமே!
விருந்தினர் வருகை!

வேட்டையாடியது உண்டா
எந்த வேடனாவது?
எங்களை……!
கருப்பாய் இருப்பதால்
பாதுகாப்பாகிறது.
தெரியவில்லையே
பெண்களுக்கு!
 கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (13-Dec-15, 9:31 pm)
Tanglish : kagam
பார்வை : 113

மேலே