விடுமுறை
விடுமுறை
ஆசை
அரக்கனுக்கு
விடுமுறை அளி!
ஆகலாம்
புத்தராக!
எனை சுமந்தவள்
விடுமுறை
கேட்டிருந்தால்
இன்று ”நான்”?
பள்ளியறைக்கு
என்றென்றும்
விடுமுறையோ…
முதிர்கன்னிகள்!
தேர்தலில்
வெற்றி
தொகுதிக்கு
விடுமுறை!
வீட்டு தலைவிகளுக்கு
விடுமுறை!
முகத்தில் முட்புதர்
ஆண்கள் !
யுகயுகமாய்
விடுப்பே இல்லாத
இதய உணர்வு
காதல்!
சூரியனும்…காற்றும்
விடுமுறை!
பூமிப்பந்து புஸ்வாணமாய்!
கே. அசோகன்.