முறை மாமன்
முறை மாமன்கள்
சீண்டி….சீண்டி சிணுங்க வைத்து
அழகு பார்த்த
சந்தோஷத்தை விடவே…
சடங்கானவளுக்கு
சீர்வரிசை வைத்து
சீராட்டி மகிழ்ந்ததுவே….
சிறப்பான பெருமை!
முறை மாமன்கள்
தாத்தா ஆகியும்…..
மாமன் மகளை
மனதுக்குள்
ஆராதிப்பது
உறவுகளின் தொடரா?
உணர்வுகளின் புதிரா?
மாமன் மகளின்
மகத்துவத்தை
மாமன் மகள்கள்
மறுப்பின்றி மறுபதிலில்…..!
காத்திருக்கிறார்கள்!
பதிலுக்காக..!
முறை மாமன்கள்!
கே. அசோகன்.