மயக்கம்

பசி மயக்கம்
வந்தது எனக்கும் .
நாற்று போல
நூலானேன் நானும் .
பருவ இதழ்
தேன் தேட ..,
மனமெங்கும்
உனை தேட ..,
நறுமணம் வீசும்
நாயகி உன்னை
நாதத்தினால்
நான் தேட ..,
எண்ணமெல்லாம்
அலைபாய .,
பின்னிய கூந்தல்
எனை வாட்ட ..,
சின்ன இடையில்
சிக்கி போனேன்
சில்வண்டாக ..,
கன்னி அவளின்
கன்னக்குழிகள்
கனைகளை தொடுக்க ..,
மின்னல் ஒளியில்
விழிகள் இரண்டும்
எனை தாக்க..,
பாதம் பட்ட ..,
பாறையிலும் பூ ..,
பூக்க ..,
கன்னி என்னை
சிறை பிடிக்க
நான் விழுந்தேன் .
அவள் மடியில் ..,