ஏமாற்றம்

அன்று வெயில் நாள்
சூரியக் கதிர்
பூமிக்கு உரமூட்ட

அவள் நின்றாள்
பேரூந்து தரிப்பிடத்தில்
சுடிதார் அணிந்து
குடை பிடித்து

அருகில் சென்றேன்
கதைத்துப் பார்க்க
பேரூந்து வர
அவளும் சென்றாள்

அன்று மழை நாள்
மின்னலும் இடியும்
மழைக்கு உரமூட்ட

அவள் நின்றாள்
பேரூந்து தரிப்பிடத்தில்
சுடிதார் அணிந்து
குடை பிடித்து

அருகில் சென்றேன்
கதைத்துப் பார்க்க
பேரூந்து வர
அவளும் சென்றாள்

அன்று பண்டிகை நாள்
பட்டாசுச் சத்தம்
பண்டிகையை சூடாக்க

அவள் நின்றாள்
பேரூந்து தரிப்பிடத்தில்
புடவை அணிந்து
ஆண்மகன் கை பிடித்து

அருகில் சென்றேன்

வாழ்த்துச் சொல்லி
திரும்பி வந்தேன்

எழுதியவர் : fasrina (14-Dec-15, 10:09 am)
Tanglish : yematram
பார்வை : 760

மேலே