கவிதைக்காரன்
![](https://eluthu.com/images/loading.gif)
மோகம் தீண்ட ; எண்ணங்களை
மூட்டி கவிதைக்கு
உணவாக்கி விட்டேன்
தாபம் கொண்டேன் ; உன்னைக்
காதல் கொண்டு
வெப்பம் கண்டு கவிதையை
அனைத்துக் கொண்டேன்
சாபம் பெற்றேன் ; என்னருகே விழாத
உன் நிழலால் கண்ட கழியதையும்
உனக்கு கவிதையாக்குந் திறன் கொண்டேன்.
போகம் அறுந்தேன் : என் மகரந்தங்களின் வெப்பம்
கவிதைக்கு முன் உறை நிலையை
எட்டி விடக் காண்கிறேன்.
காமம் குளித்தேன்; மூழியாய் நிற்கும்
உன் அத்தனை சிந்தனைக்கும்
என் அகடவிகடத்தை
திலக மிட்டுக் கவிதையில் காமம் மிளிருகிறேன்.
விரகம் வென்றேன் ; இதோ விரக நிர்வாணத்தோடு
நம் கனவுகளுக்கு ஆடை
அணிவித்து கவிதைகாரர்களின்
வீதி வழியே
இனியொரு விதி செய்ய நடக்கிறேன்......