அறம் செய விரும்பு

நிம்மதி தரும் குழந்தைச்சிரிப்பு
உயிர் வார்க்கும் குவளைநீர்
நெகிழிக்களைய மண் மணக்கும்
மனமிடம் தர பயணத்திலேது பிழை

விழுந்தாலும் துளி விதைக்கு ஆகும்
எழுந்தாலும் நீர் துளிக்கு ஆகும்
எழுவதற்கு கரங்கள் நீட்ட
விழுவதற்கு முன் கரங்கள் நீளுமே

பாதையை சுத்தமாக்கும் கைகள்
பயிரினை நடவு செய்யும் மனங்கள்
ரத்தத்தை பகிரும் பிதாக்கள்
ரணத்தில் மருந்திடும் தாய் தானே

இடக்கை இடுக்கணிருக்க வலக்கை
கொடுத்து துன்பம் தீர இன்பம் சேர்பார்
எந்நன்றி கொண்டாராவர்
ஏழ்மையிலும் வேந்தராவர்

உச்சி உடைய மெச்சிப் பேச
மயங்காதோராய் கைகள் நீட்ட
துவங்கும் கைகள் கண்ணியாகும்
அறம் செய்ய விரும்பு !

எழுதியவர் : முருகன்.சுந்தரபாண்டியன் (14-Dec-15, 5:53 pm)
பார்வை : 520

மேலே