தண்ணீர் கம்பெனி

தண்ணீர் கம்பெனி

காதில் விழுந்த
கானம் கேட்டு..
வேண்டுமென்றேன்!
வீணை!
வீணே….என்றாள்
வாணி!

தகதக்கும் தங்கம்
தேவையென்றேன்!
ஏறுமே….!
தலைக்கனமென
தவிர்த்தாள்
அலைமகள்!

வீரத்தின் பெருமை
வியந்து…
உறைவாளை
உடனே கொடு
என்றேன்
உனக்கா?
உதவாதென்றாள்!
மலைமகள்!

கங்கையின்
புனிதமறிந்தே
அருந்தவே வேண்டினேன்
கங்காதரனை!
அவர்தான்
மறுக்காமல்
அளித்தார்…….அது……?
”தண்ணீர் கம்பெனி”!


---கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (14-Dec-15, 8:49 pm)
பார்வை : 82

மேலே