கண்டேன்

வாழ்க்கையில் பரப்பல வண்ணம் கண்டேன்,
அதைக் கண்டதும் வாழ்ந்திட எண்ணம் கொண்டேன்!

நிறம் மாறும் குணங்கள் கண்டேன்..
மனம் மாறும் மனிதர் கண்டேன்..
கன்னக்குழியின் அழகைக் கண்டேன்...
கவலை மறக்க சிரிக்கக் கண்டேன்..

உயர கோவில் கோபுரம் கண்டேன்
உழைத்து வாழும் மனிதரைக் கண்டேன்.
செல்லப் பிள்ளை சிரித்திடக் கண்டேன்
அதன் மழலை மொழியில் இன்பம் கொண்டேன்!

வானில் திரியும் பறவையைக் கண்டேன்
வாசம் வீசும் மலரைக் கண்டேன்
மலரைத் தேடும் தேனியைக் கண்டேன்
அது சேத்து வைக்கும் தேனையும் கண்டேன்!

காதல் பேசும் கண்கள் கண்டேன்
பொய்கள் பேசும் பெண்ணையும் கண்டேன்
உண்மை உணர்ந்து விலகிச் சென்றேன்
என் தனிமையை எண்ணி வருத்தம் கொண்டேன்!

முதுமையில் மக்கள் பிரிந்திடக்கண்டேன்
அத்தனை உறவும் பொய்யெனக் கண்டேன்
நன்றி மறக்கும் மாந்தர் கண்டேன்
தனித்து வாழ எண்ணம் கொண்டேன்!

பணத்தைத் தேடி ஓடிடக் கண்டேன்
நிம்மதி இழந்து அலையக் கண்டேன்
கண்முன் வாழ்க்கைத் தொலையக்கண்டேன்
அவர் நிலையை எண்ணி வருத்தம் கொண்டேன்!

அன்பின் வழியே அனைத்தையும் கண்டேன்!
அதனால்,
அனாதையாகி தனித்து நின்றேன்!!

உலகம் யாதென நானும் கண்டேன்!!
இந்த மனிதரை எண்ணி வியப்புக் கொண்டேன்!!

எழுதியவர் : நேதாஜி (14-Dec-15, 9:07 pm)
Tanglish : KANDEN
பார்வை : 69

மேலே