மீள்வினை -கார்த்திகா

என்னிரு கன்னங்களை
கையில் தாங்கி
காதல் சொல்லியதில்

கை கோர்த்து
நிழல் தாங்கி
நடந்ததில்

பிடித்த புத்தகத்தை
ரசித்த வரிகளை
திரும்பத் திரும்பத்
திரும்பி நோக்கியதில்

நீயும் நானும்
வேறென்றும் மறந்ததில்

நீ மறக்காமல் சொல்லி நாக்கடித்த
அந்த யாரோ ஒருவளின்
உன் மீதான குறும்புகளில்

சிறு கோபம் கொண்டு
மீண்டும்
நானாகவே மாறுகிறேன்

நீயும் நீயாகவே
மாறுகிறாய்
மீண்டும் உதடு பொருத்தி...

எழுதியவர் : கார்த்திகா AK (16-Dec-15, 12:46 pm)
பார்வை : 141

மேலே