கஜலுக்கு ஒரு வரவேற்பு 5 வீசும் தென்றலில் உன் நினைவுகளே

Dil ki chhoton ne kabhi chain se rahne na diya
The wounds of my heart never let me live in peace
Jab chhali sard havan maine tujhe yaad kiya
When blew a blast of cool breeze, I remembered you

நெஞ்சின் காயங்களோ என்னை நிம்மதியாய் வாழ விடுவதில்லை
வீசும் குளிர்த் தென்றலோ உன் நினைவுகளை தாராமல் போவதில்லை --1

Is ka rona nahi kyun tumne kiya dil barbaad
No regrets that you devastated my heart
Is ka gham hain ke bahut der main barbaad kiya
Only complain is that you devastated it so late

இதற்கு அழுவதற்கில்லை நெஞ்சிற்கு நீதான் நாசத்தை செய்தாய்
இதில் ஒரே ஒரு வருத்தம்தான் அதை மிக தாமதமாகச் செய்தாய் -----------2


hum ko kiske Gam ne maaraa ye kahaanii phir sahii
Whose pains killed me, that tale (will tell) some other time
kisane to.Daa dil hamaaraa ye kahaanii phir sahii
Who broke my heart, that tale some other time

யார் கொடுத்த வலி என்னைக் கொல்கிறது அந்தத் துன்பக் கதைகள் எல்லாம்
பின்னொரு நாள் சகி
யார் என் நெஞ்சினை உடைத்தார் அந்தத் துன்பக் கதைகள் எல்லாம்
பின்னொரு நாள் சகி -------------------------------------------------------------------------------3

dil ke luTane kaa sabab puuchho na sab ke saamane
Do not ask the reason of my heart's devastation in public
naam aayegaa tumhaaraa ye kahaanii phir sahii
Your name will top the list, that tale some other time

இந்த இதய நாசத்தை செய்தது யாரென்று எல்லோர் முன்னாலும் கேட்டுவிடாதே
உந்தன் பெயர்தான் முதலில் வரும் அந்தத் துன்பக் கதை எல்லாம்
பின்னொரு நாள் சகி -----------------------------------------------------------------------------4

nafarato.n ke tiir khaa kar dosto.n ke shahar me.n
Wounded by the arrows of hate in the city of my friends
ham ne kis kis ko pukaaraa ye kahaanii phir sahii
Whose name I have not called, that tale some other time

உன் வெறுப்பின் கணை துளைத்து நிற்க என் பிரிய நண்பர்கள் நகரினில்
யார் யாரையோ நான் கூவியழைத்தேன் அந்தத் துன்பக் கதை எல்லாம்
பின்னொரு நாள் சகி ----------------------------------------------------------------------------------5


kyaa bataaye.n pyaar kii baazii vafaa kii raah me.n
What do I say of love's gamble on the path of fidelity
kaun jiitaa kaun haaraa ye kahaanii phir sahii
Who won, who lost, that tale some other time

என் சொல்வேன் இந்தக் காதல் சூதினை நம்பிக்கை வீதியில்
இங்கே யார் தோற்றார் யார் வென்றார் என்ற துன்பக் கதைகள் எல்லாம்
பின்னொரு நாள் சகி ----------------------------------------------------------------------------------6

MANSROOR ANWAR எழுதி GHULAM ALI இனிமையாக பாடிய GHAZAL
கேட்டுபாருங்கள்
இதைப் படித்து விட்டு பாடலைக் கேளுங்கள் . நிச்சயம் இனிக்கும்.
நினைக்க நினைக்க இன்னும் இனிக்கும் .
உருதுக் கவிதை இறைவன் இதயத்திற்கு வழங்கிய திராட்சை ரசம் .

----தமிழுக்காக கவின் சாரலன்

எழுதியவர் : MANSROOR ANWAR (16-Dec-15, 11:37 am)
பார்வை : 123

மேலே