ஒன்னுமில்லை போ

நீ முதுகு சாய்ந்து
எட்டிப் பார்க்கையில்
காத்திருந்த காகிதத்தில்
கவிதை...
-------------------------------------

மிகச் சிறந்த
புதுக்கவிதையை ஒரு
தேநீரில்
தந்து விட
உன்னால் முடிகிறது...
-----------------------------------

ஓவியத்துள் நுழையும்
வண்ணமாகிறாய்
நம் அறை நுழையும் நீ...
----------------------------------------

கொலுசுகள்
அவிழ்க்கையில்
சிரித்து விடுகிறோம்...
-------------------------------------

உன் கனவுக்குள்
என் கனவுகள்
என்ன செய்யும்...?
-------------------------------------

இன்று வரை
தவிர்க்க முடியவில்லை
நகக் கீறலை...
-------------------------------------

சில பதில் உன்
வளையல்
சொல்கிறது...
-----------------------------------

மதிய சாப்பாட்டோடு
உன் கோபமும் வரும் நாளில்
டிபன் பாக்ஸ்க்குள்
கூடுதல் ஐட்டம்
"ஒன்னுமில்லை போ"
என்ற உன் கடிதம்...
--------------------------------------

அதிகாலைக் கனவை
கவிதையாக்குகிறாய்
அனிச்சை செயலாய்
அணைத்து...
-------------------------------------

கவிஜி

எழுதியவர் : கவிஜி (16-Dec-15, 3:57 pm)
பார்வை : 169

மேலே