காதல்

* யானைக்கு
அங்குசம் ;

* கப்பலுக்கு
நங்கூரம் ;

* மனிதருக்கு
காதல்...

* பயணிப்பதும்
நிற்பதும்
நினைவதிகாரமே ...!

*****
* பொல்லாத புனிதம் ;
உயர்வான இயல்பு...!

* ஆபாச சேட்டை- அதில்
அரங்கேறும் ஒழுக்கம் ...!

* வெயிலை மறந்து குளிரும்
இருட்டும் போதும் விடியும்...

பூமியே உடைந்து சிதறும் - இதோ
இருவர் ஒருவராய் உருகும் ...!

* மானசீகமாய் ஒரு நேர்மை
மடை திறக்கிறது பல அபத்தம் ...

நிலைகெட்ட கன பிரமை
நெஞ்செல்லாம் மன அழுத்தம்...!

* பார்த்ததும் பேசியது
பேசியதும் வேர்த்தது

அற்பமான நிகழ்வுகள்

அற்புதமாகிறது
வரலாறு...!

* ஆணும் பெண்ணும்
தோண்டித் தோண்டி
பல யுகமாய் ஒரு தேடல் ...

நீயும் நானும்
இதனால் வந்தோம்
தொடங்கட்டுமே நம் காதல் ...!

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (16-Dec-15, 3:50 pm)
Tanglish : kaadhal
பார்வை : 169

மேலே