ஆசை

காதல் செய்திட ஆசை..

பட்டுப் பூவே உன் பார்வைப் பட்டதும்
என்னுள் வந்தது காதல் செய்திட ஆசை!

கைகள் கோர்த்திட ஆசை....உன்
கன்னத்தில் முத்தம் வைத்திட ஆசை..!!
சிரித்துப் பேசிட ஆசை... நாம்
சேர்ந்து நடந்திட ஆசை.!
பொய்கள் பேசிட ஆசை..செல்லமாய்
சண்டைகள் போடவும் ஆசை..!

உன் கூந்தல் வருடிட ஆசை.. அதில்
என் கவலைகள் மறந்திட ஆசை!
தோளில் சாய்ந்திட ஆசை..உன்
மடியினில் தூங்கிட ஆசை..!
கதைகள் கேட்டிட ஆசை.. உன்
காதில் இரகசியம் பேசிட ஆசை!

உலகம் சுற்றிட ஆசை.. என்
உயிராய் நீ வர ஆசை!
திருமணம் புரிந்திட ஆசை..நாளும்
உன் திருமுகம் பார்த்திட ஆசை!
ஓவியம் தீட்டிட ஆசை..அதை
நம் வீட்டில் மாட்டிட ஆசை..!

உன்னைக் கையில் ஏந்திட ஆசை..நாளும்
என் நெஞ்சில் தாங்கிட ஆசை!
விட்டுக் கொடுத்திட ஆசை..
நாம் புரிந்து வாழ்ந்திட ஆசை..!
உன் கண்ணீர் துடைத்திட ஆசை..என்
கனவில் நீ வர ஆசை..!

முதுமை எய்திட ஆசை..முடிவில்
உன் மிடியில் உயிர் விட ஆசை!!

சிறப்பிக் குள்ளே முத்தாக
சேர்த்து வைத்த ஆசை..
செம்மண் சேர்த்த நீர்த்துளி போல
தேக்கி வைத்த ஆசை!!

நாளும் பொழுதும் நதியே உன்னில்
நான் பயணம் செய்திட ஆசை!!

கனவில் மட்டும் காதல் செய்தவன்
நிஜத்தில் நீ வர ஆசை!!

எழுதியவர் : நேதாஜி (16-Dec-15, 2:14 pm)
Tanglish : aasai
பார்வை : 142

மேலே