காதல் விபத்து
என் தங்கை குருவாக,
எதிர் வீட்டுப் பிரியா
சைக்கிள் பழகினாள்...
காலை ஒரு முறை,
மாலை ஒரு முறையென,
முறை வைத்துப்பழகினாள்.
ஒரு முறை சைக்கிளை-
என் மேல் விட்டு,
என்னிதயத்தில் இறங்கினாள்,
பின் என்னிடமும் பழகினாள்...

