இந்த காதல்

சிறிய சண்டையில் ஆரம்பித்தது 
நம் காதல்...!!! 
நீ பார்த்த அந்த கடைக்கண் பார்வையில் 
விழுந்தேன் அன்று...!!! 
இப்படியே சில காலம் நம் கண்கள் 
பேசிக்கொண்டன...!!! 
அன்றுதான் அறிந்து கொண்டேன் கண்களும் 
பேசிக்கொள்ளும் என்று...!!! 
முதல் தடவை நீ என்னுடன் பேசிய அந்த வார்த்தை 
இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது...!!! 
உன் வீட்டில் பிரச்சினை பல வந்தும் 
என்னை நீ காதலித்தாய்...!!! 
உன்னை நினைத்து நான் கண் கலங்காத 
நாட்கள் இல்லை...!!! 
நான் வேறொரு பெண்ணிடம் பேசினால் கூட 
உன் முகம் வாடிவிடும்...!!! 
அந்த அளவுக்கு என் மேல் 
பாசம் வைத்திருந்தாய்...!!! 
ஒருநாள் உன் முகத்தை நான் பார்க்காவிட்டால் 
அந்த நாள் எனக்கு நாள் இல்லை...!!! 
அப்போதுதான் புரிந்து கொண்டேன் 
இதற்கு பெயர்தான் காதல் என்று...!!! 
வெறுமையாக இருந்த எனது மனதுக்குள் மாற்றத்தை 
உணர்த்தியது இந்த காதல்...!!! 
கனவுகள் இல்லாத எனது இரவுகளில் கனவுகள் 
இதுதான் என உணர்த்தியது இந்த காதல்...!!! 
இப்படியே என்னை அறியாமல் பல மாற்றங்கள் 
என்னுள்...!!! 
உன்னையே அறியாமல் உனக்குள்ளும் பல 
மாற்றங்கள்...!!! 
இப்படியே சில காலம் நீ இன்றி நானில்லை 
நான் இன்றி நீயில்லை...!!! 
என காதலித்தோம்,,,, 
காதலுக்கு மறு பெயர் பிரச்சினையோ???,,, 
உனது அம்மாவுக்கு பிடிக்கவில்லை இந்த காதல்...!!! 
அதையெல்லாம் மீறி என்னை 
காதலித்தாய்...!!! 
எனக்காகவும் நம் காதலுக்காகவும் பிரச்சினைகளை 
தாங்கி கொண்டாய்...!!! 
உன்னுடைய இறுதி பரீட்சை முடிந்ததும் 
நீ பார்த்து பேசி சென்ற இடம் இன்னும் எனது மனதுக்குள்...!!! 
சில மாதங்கள் பிரிவு,,,, 
உன்னை பார்க்க ஏங்கினேன்...!!! 
உன்னுடன் பேச துடித்தேன்...!!! 
ஆனால் முடியவில்லை...!!! 
எதிர் பார்த்து கொண்டிருந்தேன் உன்னை........ 
அந்த காலமும் வந்தது...!!! 
ஆசை ஆசையை ஓடி வந்தேன் உன்னை காண... 
உன்னுடன் மனது விட்டு பேச...!!! ஏமாற்றம் மட்டுமே அன்று நிகழ்ந்தது...!!! நீ என்னை கண்டதும் உன் முகத்தை 
மூடி கொண்டாய்...!!! 
என்னோடு விளையாடுகிறாய் என்று நினைத்து 
உன் அருகில் வந்தேன்...!!! 
ஒரு முறையேனும் என்னை நீ பார்க்கவில்லை...!!! 
என்னை அறியாமல் கண்களில் இருந்து 
தாரை தாரையாக கண்ணீர்...!!! 
என் கண்ணீருக்கு பதில் சொல்ல கூட 
உன் கண்கள் என்னை பார்க்கவில்லை...!!! 
காரணம் என்னவென்று அறியாமல் தவித்தேன் 
திசை மறந்த பறவை போல்...!!! 

காலங்கள் உருண்டோடின,,,, 


இயற்கையிலும் மாற்றங்கள் என்னை சுற்றி இருந்தவர்களிடமும் 
மாற்றங்கள்...!!! 
எந்த மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் என்னுள் எந்த மாற்றங்களும் 
இல்லை...!!! 
உன் நினைவுகளோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...!!! 
எப்போதாவது நீ வருவாய் என காத்திருக்கிறேன்...!!! 

"" காதல் பிரிவின் காரணம் அறியாமல் தவிக்கும் ஒரு ஜீவன் ""

எழுதியவர் : முஹம்மத் றபீஸ் (17-Dec-15, 3:24 pm)
Tanglish : intha kaadhal
பார்வை : 114

மேலே