போரும் அமைதியும்
* அவசர கோலத்தில்
அனைத்தையும்
தின்று விட்டேன்
பஞ்சு மிட்டாயை..!!
* வந்ததே ரவுத்திரம் ...
ஆதலால் நிகழ்ந்தது;
வரலாறு காணா
யுத்தம்
அவளுக்கும்
எனக்கும்...!
* மறுநாள்...
பொறுக்கி வந்த - நாவல்
பழங்களையெல்லாம்
அள்ளிக்கொடுத்தேன்
வள்ளலாய்
பள்ளிப்பருவத்தில்...!