முத்தப் பார்வை
வசந்த காலத்தில்
எனக்கு வசந்தன்
முத்தம் தந்தான்
வாடைக் காலத்திலோ
வாகீசன் வந்தான்
ஆனால் கண்ணன்
என்னை உற்று
மட்டுமே பார்த்தான்
எனக்கு முத்தம்
என்றுமே தந்ததில்லை
வசந்தனின் முத்தம்
அன்றே காற்றினில் பறந்தது
வாகீசன் தந்ததோ
விளையாட்டினில் தொலைந்தது
கண்ணனின் கண்கள் தந்த
முத்தமோ இரவும் பகலும்
நித்தமும் வாட்டி எடுக்குது.