விட்டக்குறை தொட்டக்குறை - 2
விட்டக்குறை தொட்டக்குறை - 2
===============================
எல்லாரையும் கடந்துவிட்டுதான்
அவன் கதவுவரை வருவேன் என அறிந்தும்
விழித்திருப்பான்
வந்து ஒருமுறைதான் தட்டுவேன் ,,
திறக்கமாட்டான்
முதல் முதலில் அன்றுதான்
நிலைக்கண்ணாடியை வெறுக்கிறேன் போல ம்ம்ம்ம்
என் முகம்நோக்கி நீ அவிசாரி என்று
அவன் கோபத்தில் சொன்னப்போது ம்ம்ம்
முத்தம் கொடுக்கிறபோதெல்லாம்
போதும் போதும் என்று சொல்லுவேன்
ஏன் தித்திப்பு திகட்டிவிட்டதா எனக்கேட்டுவிட்டு
ம்ம்ம்ஹிம்ம் போதாது
இன்னும் தா என்று நான் சொல்வதையே
விரும்புவான்
வழக்கமானநேரத்தில் கண்டுகொள்ளாமல் விட்டாலும்
நீ தகித்துக்கொண்டிருந்த பாலையில்
உனக்கெனக்கிடைத்த உறைக்கிணறு நான்
உன் தாகம் தீர்ந்ததால்
இந்த ஊற்றை மண்ணிழுத்து மூடிவிட்டாயா என்பான்
வெறுமனே வெறுப்பூட்ட வேண்டி
நானனுப்பும் பறக்கும் முத்தங்களை தெரியாமல் கூட
உன் கைகளால் வழிமறித்துவிடாதே ,,
அவைகள் அருகிருக்கும்
உன் தோழியின் உதட்டில் சென்று
அமர்ந்துவிடும் தெரியுமா என்பான்
திறக்கில் இருப்பானென்று பிறகு பேசட்டுமா என்றால்
சற்றுபொறு என்றவன் படுக்கையை சரியாக்கி
அவன் குளிருக்கு என்னை சுகமாக்கிவிடுகிறான்
நானோ செய்வதறியாமல்
அப்பொழுதுதான் காலூன்றிய கன்றுபோல
வருவோர் போவோர் முன்னிலையில்
துள்ளித்தாவி நகம் கடித்து முழுப்பிச்சியாகிருப்பேன்
எங்க"டீ" இருக்க என்கிற
மிரட்டலினாலும் அச்சுறுத்தலினாலும்
என்னையே தொடர்ந்துகொண்டிருந்தாலும்
அவன் போடும் "டீ" என்றப்போர்வையில்
இமைகள் சிறகடித்து நாசிப்புடைக்க
இதோ கன்னம் சிவக்கவேதான் செய்கிறேன்
எதிலேயுமே காலை மாலை என
நேரம் பார்க்கும் எனக்கு
அவனைப்பிடிக்கும் விஷயத்தில் மட்டும்
நேரங்காலமே இல்லாமற்போய்விட்டது ம்ம்ம்
ஊரே அவனை பொறிக்கி என்று
பொறுக்கிக்கொண்டிருந்தாலும்
என்னை ஈர்த்தது அந்த பொறிக்கித்தனந்தான்
"பூக்காரன் கவிதைகள்"