மாடு பிடி
மாடு பிடி
----------------------
வாசல் வரை வந்தவா்கள்
உள்ளே வராமல்
எட்டிப்பார்த்தார்கள்
வாடிவாசல்
வாடிவாசலிலிருந்து
வீசி எறியப்பட்டன
அம்புகள்
கொம்புகள்
இளைக்கவில்லை
இழைக்கப்பட்டிருந்தன
கொம்புகள்
காளையின்
கொம்பில்
கரக்கப்பார்த்தார்கள்
பரிசு
பிழை செய்தால்
பிழைக்கமாட்டாய்
வம்புக்கு வரும்
கொம்பிடம்
காளை விழுந்தாலும்
நீ விழுந்தாலும்
விழப்போகும் மாலை
உனக்குத்தான்
புல் திங்கும் புலி
கண்
இமைக்கும்
இடைவெளியில்
கடந்துசென்ற
கன்றுக்குட்டி
பாய்ந்து
திமில் பிடித்தால்
வெற்றி
உனக்குச் சொன்னார்கள்
மாட்டுக்கு
யார் சொன்னது
உன்னை துாக்கி
எறிய
வாடிவாசலில்
வாடவில்லை
பிடிப்பவனும்
மாடும்
கைக்கு கிளவுஸ்
தலைக்கு ஹெல்மட்
காலுக்கு பேடு
கட்டி ஆடியும்
காயமாகிறான்
கிரிக்கெட்
துணிவையும்
துணியையும்
வைத்து துாரியாடுகிறான்
காளை கழுத்தில்
மாலை ஆகிறான்
காயமில்லாமல்
ஜல்லிக்கட்டு
காளையா்
கால்கள்
காளைமேல் கிடக்க
காளையோ
காற்றை கிழிக்க
பார்ப்பவா்
பாரேங்கும்
பரந்திருக்க
யாரப்பா
தடை செய்தது
தமிழா நீ
விளையாடினாலும்
வினையாக்குகிறார்கள்
ஜல்லிக்கட்டு
தமிழா உன்
விளையாட்டு
ஒவ்வொன்றாய்
விட்டுவிட்டாய்
விட்டுவிடாதே
மாட்டை
விட்டுவிடு
கயிற்றை
ஜல்லிக்கட்டை
அழிக்க அலைபவனுக்கு
தமிழா நீ வை
கொல்லிக்கட்டை
மாட்டில் மாட்டியிருந்த
மாலைகள் உதிர
பிடிப்பவன் உடலில்
உதிரம் உதிர
யாருக்கு துன்புறுத்தல்
பார்ப்பவனுக்கா
கோழைகள் சேர்ந்து
தடைசெய்தார்கள்
வீர விளையாட்டை
மண்ணை
கொம்பால் கிளறி
முன்னங்காலை
தடவி
ஒத்திகை பார்த்தது
காளை
ஜல்லிகட்டை தடைசெய்தாலும்.
--------கா.காஜாமைதீன்
பெரியகலையம்புத்துார்
பழனி.