காதலின் வலி --- தரவு கொச்சகக் கலிப்பா

காதலினால் கசிந்துருகிக் கவிதையினை வனைந்திடவும்
மோதலினால் முகம்சுருங்கி மொழியற்றுச் சிதைத்திடவும்
நோதலினால் மனம்நொந்து நொடிப்பொழுதும் மறவாதுச்
சாதலினை நினைத்துநானும் சகலமுமே விடுத்தேனே !


நான் கொண்ட உண்மைக் காதலினால் ,

காதலின் கனியெனக் கவிதையின் மலராய்
மோதலை விடுத்து மொத்தமாய் நினைந்தேன் .
சாதல் மாற்றும் சக்தி நீதான்
காதல் கொண்டேன் கண்ணே
தீதல் நீங்கிடத் திருப்பமும் தருவாய் !


( நேரிசை ஆசிரியச் சுரிதகம் )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (17-Dec-15, 5:09 pm)
பார்வை : 98

மேலே