இனி எல்லாமே ‘நானோ’ தான்…

100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவில் சிறப்பான பண்புகளை வெளிப்படுத்தும் கருவிகள் அல்லது பொருட்கள் நானோ கருவிகள் / பொருட்கள் எனப்படும். அது போன்ற பொருள்களை உருவாக்கும் நுட்பவியல் தான் நானோ தொழில்நுட்பம் (NanoTechnology) எனப்படுகிறது. 1975-ஆம் ஆண்டு வரை நானோ தொழில்நுட்பம் என்று ஒரு துறை இல்லவே இல்லை என்ற போதிலும், நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆனது மிகவும் அபாரமானது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியாக முழுக்க முழுக்க வருங்காலத்தை நோக்கி பயணிக்கும் படியான அதிநவீனமான மற்றும் வியக்க வைக்கும் டாப் 10 நானோ கண்டுப்பிடிப்புகளைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். அவைகள், இனி வரும் காலங்களை நானோ தொழில்நுட்பம் தான் ஆளும் என்பதை நிரூபிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை

மின்னியல் மூலம் சிக்கலான உருவங்களை கூட அமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட உலோகம்.

ஊசி இல்லாமல் உடலுக்குள் மருந்தை செலுத்த உதவும் நானோபாட்சஸ்..!

நீரில் இருந்து எண்ணெய்யை பிரித்து விளக்கி நீரை மட்டும் பயணிக்கும் படியாக செய்யும் – நானோ தொழில்நுட்ப முறை..!

ஆழமான கடலில் பயணிக்கும் நீர்மூழ்கி கப்பல்களின் உள்ளே சுவாசம் மற்றும் அதன் வாசம் எப்படி இருக்கும் என்று நாம் யோசித்துக்கூட இருக்க மாட்டோம், மோசமாக இருக்குமாம். அந்த சிக்கலை தீர்க்க உருவாக்கப்பட்டதே இந்த நானேபொருள்..!

மின்சார கடத்தியாக (Electricity conductor) உருவாக்கப்பட்ட நானோ தொழில்நுட்ப பொருள்.

செயற்கை கண் பார்வை அல்லது நானோ-ப்லிம் டிசைன் (Nanofilm design) ஆகிய நானோ தொழில்நுட்ப வடிவமைப்புகள் எதிர்காலத்தில் வெளியாக இருக்கிறது.

சுற்று சூழலில் இருந்து இயக்க சக்தியை (Kinetic Energy) பெற்று போன்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளும்படியான ஆக்க முயற்சியில் நானோ தொழில்நுட்பம் ஈடுப்பட்டு கொண்டிருக்கிறது.

மிளிரும் ஆடைகள் (Glowing Clothes) : நானோ தொழில்நுட்பம் மூலம் ஒளிவீச்சு இழைகள் (Light-emitting fiber) கொண்டு உருவாக்கப்படும் மிளிரும் ஆடைகள்.
மனித உறுப்புகளில் உள்ள பழுதுகளை சரி செய்ய உதவும் இது உடலுக்கு உள்ளேயே தங்கி சில நாட்களில் கழிவாக மாறி வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 3டி கெமிக்கல்களை கொண்டு ஆயிரக்கணக்கான கெமிக்கல்களை (Chemicals) உருவாக்க முடியும்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (17-Dec-15, 8:24 pm)
பார்வை : 475

மேலே