திருப்பங்கள்

காட்சி -1 :
==========
எத்தன முறை சொன்னாலும் கேட்க மாட்டீங்களா? எனக்கு வெளிநாடு போகணும், இந்த ஊரு நாடு எதுவுமே புடிக்கல, என்று சிவகாசி பட்டாசு போல வெடித்து சிதறச் செய்தாள் கோதை. கேட்டு வாய் திறந்து பேச முடியாமல் கல்லாகி உறைந்து நின்றான் சதீஷ்.

அவளின் ஆட்டம் அடங்கி சற்று சமநிலையில் நின்றபோது, மெல்ல சதீஷ் ஆரம்பித்தான்....ஏம்மா இப்படி சதா வெளிநாடு வெளிநாடுன்னு சண்ட கட்டுற? நம்ம முன்னம் ஒரு தரம் போயிருந்தபோது நம்ம ஊரு போல இல்ல, சென்னை போலாம் போலாம்னு குதிச்சு நாலு மாசத்துக்குள்ள இங்க வர வச்ச. இங்க வந்து எட்டு மாசம் கூட ஆகல இப்போ திரும்பி போகனம்னு அடம் பிடிக்கிற, ஏன் எதுக்குன்னு சொல்லவும் மாட்டீன்கிற...!

திரும்பவும் UK ப்ரொஜெக்ட்ல போக முடியாது, ஆஸ்திரேலியா ப்ரொஜெக்ட்ல தான் வாய்ப்பு இருக்கு. அது விசா, வொர்க் பெர்மிட் ன்னு 2 மாசம் அல அல அலைன்னு அலையுறேன், இப்போ அது தான் பண்ணிட்டு இருக்கேன், இன்னும் ஒரு மாசத்துல பறந்திடலாம்...!

கோதை, இன்னும் சமாதனம் ஆன மாதிரி தெரில. கொதிப்பேறி உச்சத்துல சூடேறி சித்த பிரமை புடிச்ச மாதிரி கார் சாவிய எடுத்திட்டு வெளிய ஓடினான். மனதிற்க்குள் விசா கிடைக்கக்கூடாது கடவுளே, நான் இங்க இருந்தா தான் இவ கொட்டத்தை அடக்க முடியும் கூடவே வயசான அப்பா அம்மாவை கடைசிவரை நல்லபடியா பாத்துக்கனும்னு மொனகிக் கிட்டே காரை எடுத்தான்.

காட்சி-2:
========
அவளை மறக்க நினைக்கிறன், முடியலையே ஆண்டவா...! இரவும் பகலும் கொஞ்சிக் கொஞ்சி பேசினாலே... அசை வார்த்தைகளை அள்ளித் தெளிச்சாளே...துரோகி..இப்படி ஏமாற்றி விட்டாளே கொடும்பாவி. இன்னும் ஊத்து, நெறியா ஊத்து நான் குடிக்கணும், குடிக்கணும், போத தலைக்கேற குடிக்கனும்னு பார்ல சண்டைபோட்டு குடிச்சிட்டு இருந்தான் குணா.

தள்ளாடி தள்ளாடி பல்லாவரம் ரேடியல் ரோடு பார விட்டு வெளியே வந்தான். குணாவிற்கு ஒன்னுமே தெரியல, பகல் 11 மணி, சுத்த இருட்டா தெரியுது அவன் பார்வைக்கு. தடவி தடவி ரோடுக்கு வந்து, ஒரு எழுதத் தெரிஞ்ச குடிமகனை தோல் தட்டினான். குடிக்க காசு தர்றேன், நான் சொல்லுறத எழுதித் தருவியான்னு குணா கேட்டான்.

குடிமகனும், ஓடோடி பேப்பர் வாங்கி வந்து, எழுதத் ஆயத்தமானான். குணா சொல்லச் சொல்லச் எழுதினான். கடைசி வரியில் தான் சாவதற்கு அவளே காரணம் என்று அவளின் பெயரைக் குறிப்பிடாமல் முடிக்கச்சொல்லி. தன் கை எழுத்தைப் போட்டான். எழுதிய குடிமகனுக்கு 100 ரூபாய் கொடுத்துவிட்டு. சாவதற்கு தயாரானான்.

வெகு நேரம் ரோடின் ஓரத்தில் நின்றபடி இருந்தான். போதை மெல்ல மெல்ல குறையத் தொடங்கிற்று. ஏதோ ஒரு குறிப்பிட்ட காரை நோக்கியபடி காத்திருந்தான். வந்தது அந்த கார். நிறமும், முன் கண்ணாடியில் ஒட்டியுள்ள சாய் பாபா துணை வாசகமும், மங்கலாக தெரிந்த நம்பரும் உறுதி செய்தது. நான் செத்தாலும் உன்ன நிம்மதியா வாழ விட மாட்டேன்டி ன்னு கத்தியபடி அந்த காரின் மீது பாய்ந்து, அடித்து தூக்கி வீசியது. சம்பவ இடத்துலேய சவமானான் குணா.

காட்சி - 3:
=========
ஐயோ ஐயோவென்று கத்தியபடி காரை விட்டு இரங்கி ஓடிவந்து குணா மூக்கில் கைவைத்து பார்த்தால், உயிர் இல்லை. தலையில் இடிவிழுந்தது சதிஷிர்க்கு. மக்கள் சூழ்ந்து கொண்டனர். ஒரு சாரார் குணா தான் பாய்ந்து விழுந்ததாய் சொல்கின்றனர். வேறு சிலர், சதீஷ் வேணுமென்றே காரை நிதானித்து, ஆள் விழுகிறான் என்று தெரிந்தவுடன் காரை நிறுத்தாமல் வேகம் கூட்டி இடித்துத் தள்ளினான் என்கின்றனர்.

ஒரு புறம் குற்றவாளியாக ஜெயிலுக்கு போக வேண்டுமா என்ற பயம் ? மறு புறம் போலீஸ் கேஸ் இருந்தால் விசா கண்டிப்பாக கிடைக்காது என்று லேசான சந்தோசம்.

போலீசும், ஆம்புலன்ஸ்சும் வந்தனர், குணா சட்டை பையில் உள்ள கடிதத்தை படித்தனர். மெதுவாக சதீசிடம், ஒன்னும் பயப்பிடாதீங்க சார், இது தற்கொலை போல தான் தெரியுது, ஸ்டேஷன் வந்துட்டு போகச் சொன்னார்.

குணாவை மொபைலில் ஒரு போட்டோ எடுத்து கொண்டான். பட படப்பு அடங்காமல் அல்லோலப் பட்டான். ஏன் இப்படி நடக்கிறது, ஒன்றும் புரியவில்லை. புலம்பி தவித்தான். தவிப்படங்கும் முன், ஸ்டேஷன் சென்று போலீஸ் சொன்னபடி செய்துவிட்டு கிளம்பினான்.

காட்சி 4:
========
மொபைல் சிணுங்குகிறது. வேண்டா வேறுபாடு மொபைலை தேடி எடுத்து நம்பரை பார்த்தவுடன் கோவப் பட்டு ஐயோ....என்னை விட மாட்டியா? தெரியமான உன்னோட பல நாள் முகம் காட்டாம வலைதளத்துல பேசினோம். ஒரே ஒரு முறை என் வீட்டில் உன்னோடு அத்து மீறினோம். ஆமாம் தப்பு தான் உன்னை ஏமாற்றியது தப்புதான். நான் திருமணம் ஆகாதவள் என்று சொல்லி உன்னோடு வலைத்தளத்தில் உறவாடியது தவறு தான்.

உன்னிடம் நான் யார் என்று சொல்லி புரியவைக்கவே, என் வீட்டிற்க்கு அழைத்தேன். ஆனால் நீ எனக்கு நேரம் கொடுக்காமல் ஏதேதோ செய்து விட்டாய். அதில் எனக்கும் பங்குண்டு, இல்லையென்று மறுக்கவில்லை. அதுவே கடைசியாக இருக்கட்டும் என்று எவ்வளவு முறை சொல்லியும் கேட்காமல் என்னை திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்துவது, எந்த வகையில் நியாயம்?

எனக்கு குழந்தை இல்லைதான், இருந்தாலும் எனக்கு அமைந்த கணவர் தங்கமானவர், முரட்டு கோபக்காரரும் கூட. இந்த விஷயம் அவர் காதுக்கு எட்டினால், முதலில் உன்னையும், பிறகு என்னையும் கொன்றுவிடும் ஆத்திரக்காரர். புரிந்தகொள்! புரிந்துகொள் குணா!! என்று ஓ வென்று அழுதாள் கோதை.

மொபைல் திரும்பத் திரும்ப கத்தியது. முகத்தைத் துடைத்துக்கொண்டு சொல்லு டா குணா, இன்னும் என்னை என்ன செய்ணும், சொல்லு சொல்லு சொல்லு கத்தினாள். ஹலோ மேடம், மேடம் நான் சின்னசாமி pc பேசுறேன். இங்க காருல அடிபட்டு ஒருத்தர் செத்துக் கிடக்கிறார், அவரு போனுல கடைசியா டயல் பண்ணி இருந்த நம்பர் உங்களுடையது, அது தான் கால் பண்ணினோம்.

திடுகிட்டாள்! அதிர்ச்சியில் உறைந்தாள்!! போனைத் துண்டித்துவிட்டு லேசான ஆனந்தத்தில் சிரித்தாள். தன் பிரச்சனைக் குரியவன் இறந்துவிட்டான். இனி தன் வாழ்கையை வாழலாம், என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

காட்சி 5:
========
கோதை, வெந்நீரில் நீராடி. தன் கணவனுக்கு பிடித்த சமயல் செய்துவிட்டு. தலை நிறைய மல்லிகை பூ வைத்து. வீட்டில் எங்கெங்கு முடியுமோ, அங்கெல்லாம் அலங்காரப் படுத்தி. புது வாழ்க்கை துடங்க ஆயத்தமானாள்.

நேரம் செல்லச் செல்ல, கோதைக்கு ஒன்றும் புரியவில்லை. சதிஷிருக்கு போன் செய்தால், தொடர்ந்து கட் செய்த படியே இருந்தான். மாலை தாண்டி இரவு இருட்டிக் கொண்டிருந்தது.

தன் மனதிருக்கு புடித்த இளையராஜா பாடல்களை கேட்ட படி ஏதோ ஒரு உலகத்தில் மிதந்த படி இருந்தால். தான் ஒரு வாலிப பையனின் வாழ்கையை சும்மா நேரம் கழிக்க பயன் படுத்திவிட்டு, ரோடில் பிணமாய் கிடப்பது பொருட்படுத்தாமல் மயக்கத்தில் கிடந்தாள்.

சதீஷ், விபத்து நடந்ததால் விசா மறுக்கப் படும் என்று உறுதியாய் புரிந்தது. இதை கோதையிடம் எப்படி சொல்லுவது என்று தெரியாமல் பதறிக் கிடந்தான். ஒரு மாறி சுதாரித்து விட்டு கேப் பிடித்து வீடு சென்றான்.

உள்ளே நுழைந்ததும், நடந்ததை சொன்னான். கோதை அதிர்ச்சி அடையவேயில்லை, மாறாக சதிஷிடம் கவலைப் படவேண்டாம். நாம் இங்கயே இருக்கலாம் என்றாள்.

ஒன்றும் புரியாத சதீஷ், முகம் கழுவ பாத் ரூம் அடைந்தான். உள்ளே இருந்தபடி கோதையிடம் தன் வண்டியில் மோதி உயிர் இழந்தவன் போட்டோ இருப்பதாகவும், அதை வேண்டுமென்றால் பார் என்றான்.

சரி என்றபடி மொபைலை அன்லோக் செய்து பார்த்தாள், உறைந்து போனாள். உள்ளே இருந்து ஒலித்தது குரல் பார்த்தாச்சா?

நடுங்கியபடி ம்ம்ம் பார்த்தேன் பார்த்தேன்னு சொல்லி பெட் ரூம் உள்ளே ஓடினாள். இது விபத்தா? இல்லை கொலையா? என்று சந்தேகம் உதித்தது கோதைக்கு.......................!

திருப்பங்கள் தொடரும் - பாகம் இரண்டில்....!

காட்சி - 6
=========
திரையரங்கில் வெளிச்சம் வந்தது. ரவியும், ரேவதியும் கூட்டத்தோடு கூட்டமாய் வெளியே வந்தனர். வந்தவுடன், டேய் ரவி இப்போ நம்ம மேட்டரு மட்டும் என் புருஷனுக்கு தெரிஞ்சா சத்தியமா இதே மாதிரி கொலைதான் பண்ணுவாருன்னு புலம்பி தவிச்ச...

ஹே ரேவ்ஸ் சும்மா இரு, நாம பாத்தது சினிமா, நிஜம் வேற. சோ நீ பேசாம உன் வீட்டுக்கு போ, மணி 4 ஆகுது. நான் உனக்கு இரவு போன் பண்ணுறேன்னு சொல்லி அனுபிச்சான் ரவி.

பைக்க எடுத்திட்டு வீட்டுக்கு போகும் போது ரேவதி சொன்னது சதா ஒலிச்சிட்டே இருந்ததாள, டாஸ்மாக் போயி சரக்கு வாங்கிட்டு போனான்.

வீடடைந்து குடிக்க ஆரம்பிச்சான், குடிச்சிட்டே இருக்கான், அவ சொன்னது திரும்பத் திரும்ப நியாபகம் வருது. பாட்டில் காலி.

இரவு தூங்கனும், அதுக்கு இன்னும் சரக்கு வேணும்னு வண்டிய எடுத்தான். மிதமான வேகம் சுமாரான டிராபிக். திடீரென்று போன் கால், அப்படியே ஹெட் போனை தடவி தடவி எடுத்து, ஹெல்மெட்டை கழட்டி பெட்ரோல் டான்க் மீது வைத்து, காதில் சொருகியபடி ஹலோ என்றான், ஹே நான் தான் ரேவ்ஸ் என்றாள்.

டமார் என்று ஒரு சத்தம் மட்டும் ரேவதி காதில் ஒலித்தது..........!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (17-Dec-15, 9:01 pm)
Tanglish : thiruppankal
பார்வை : 347

மேலே