தேவதைகள் தூங்குகிறார்கள் - 14

தேவதைகள் தூங்குகிறார்கள் - 14
--------------------------------------------------

...........தடக் தடக்
.....................தடக் தடக்
................................ தடக் தடக்....

என்று மெல்ல மெல்ல தாலாட்டியவாறு ரயில் சென்று கொண்டிருந்தது....

விஷா.... அன்று பார்த்தது போலவே பக்கவாட்டு மேல் பெர்த்தில் அழகாக தூங்கிக் கொண்டிருந்தாள்....

...தூண்டில் கண், ஜப்பான் மூக்கு, தொங்கட்டான் காது, இரண்டடுக்கு ஆரஞ்சு சுளையின் இதழ்கள்... கொண்ட சற்றே பெரிய நெற்றியில் சிறிய பொட்டு கொண்ட... வட்ட முகம்...... ஜப்பான்காரியாவதற்கு முந்தைய நிமிடத்தில் நின்று விட்ட தமிழ் முகம்....

வலது பக்க மேல் பெர்த்தில் அன்று போலவே நான்......

தேவதை அன்று கூறிய‌ முதல் வார்த்தையை, வாக்கியத்தை... சொற்றொடரை... கவிதையை.... நான் நினைவு ஊஞ்சலில் அமரச் செய்து மெதுவாகப் பறந்து கொண்டிருந்தேன்.....

"அந்த லைட்ட கொஞ்சம் அணைக்க முடியுமா...?"....!!!!!!

திரும்ப திரும்ப காதுக்குள் ஒலித்த அந்த வாக்கியத்தில் மிதந்தவாறே, என் தூங்கும் தேவதையை ரசித்துக் கொண்டிருந்தேன்.....

எங்கள் பெட்டி முழுவதுமே காலியாக இருந்தது.... அவளது அப்பா... கீழ்பெர்த்தில் கண்களை திறந்துவைத்தபடியே... என்னை முறைத்துக் கொண்டு இருப்பது போல தூங்கிக்கொண்டிருந்தார்....

அப்பொழுது தான் ஏதோ ஒரு ஸ்டேஷன் வந்தது போல ரயில் நின்றது....

எங்களது பெர்த் கதவிற்கு அருகில் இருந்ததால், அந்தப் பெட்டியின் கதவு திறக்கப்படும் ஓசை மிக நன்றாகவே கேட்டது...

என் ஜப்பான் முகத்தழகி திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள்....

கதவைத் திறந்த படியே உள்ளே நுழைந்தவரைப் பார்த்ததும், என் உடம்பெங்கும் தாங்க முடியாத அதிர்ச்சியில் அதிர்ந்தது...

அவரது நெற்றிப் பொட்டில் தோட்டா பாய்ந்ததற்கான அடையாளம் தெரிந்தது...

இவர்... இவர்......

என்னை பிடித்து வைத்து, அடி அடியென அடித்து, பின் என்னை காப்பாற்ற வந்த சிலரால் சுடப்பட்ட அந்த இன்ஸ்பெக்டர் அல்லவா......

......என்று யோசித்துக் கொண்டு இருந்த மைக்ரோ நொடியில், என்னைப் பார்த்து நேராக வந்ததவர்..... என்னை முறைத்த படியே.... பாக்கெட்டிலிருந்த ரிவால்வரை எடுத்து... என் தேவதையை

...................டுமீல்... டுமீல்................

என நான்கைந்து முறை சுட்டுவிட்டார்.....

ஒரு சாத்தனைப் போன்ற கோரமான சிரிப்புடன் அவர் என்னை நோக்கித் திரும்ப...

இரத்த வெள்ளத்தில் கிடந்த விஷாவைப் பார்த்து....

""""""விஷா.... விஷா....""""""

என்று கத்தியவாறே நான் எழுந்துவிட்டேன்....

எதிரே படித்திருந்த கைதி... என் காட்டுக்கத்தலுக்கு பயந்து விட்டான் போல...

அரக்கப்பரக்க எழுந்து ஏதோ பேயடித்தவன் போல பதறிப் போய் உட்கார்ந்திருந்தான்...

"சே.... என்ன கனவு இது".... எப்போது விடுதலையாகி விஷாவை சந்திக்கப் போகிறோம்... என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வேளை.....

****************************************************************************************************************************************************

ஆதி பிடித்த குடியின் கீழே அழகாக வேட்டி சட்டையில் நின்று கொண்டிருந்த விஜியைப் பார்த்து... ரசித்துக் கொண்டிருந்தாள் விஷா...

ஒவ்வொரு பிரச்சனையும் மெல்ல மெல்ல மேகமென விலகிச்சென்றதில்... இப்பொழுது திருமண மண்டபத்தில் மணக்கோலத்தில் நின்று கொண்டிருந்தார்கள் அவர்கள்....

அதீத பூரிப்புடன் வானத்திலிருந்து இறங்கி வந்தவளாய்... பார்ப்போரை கிறங்க வைப்பவளாய்... விஜியுடனான திருமண வாழ்வை எதிர் நோக்கி நின்று கொண்டிருந்தவளை.........

....... சட்டென ஒலித்த அலைபேசி ஓசை.... தன் நிலை மறந்திருந்தவளை.... எதிர்கால கனவில் கற்பனை சுமந்து நின்றவளை... நிகழ் காலத்திற்கு வரவழைத்தது......

அது தோழர் பரதனின் அழைப்பு....

"நாங்கள் எங்களாலான எல்லா விதமான முயற்சிகளும் பண்ணிக்கிட்டு இருக்கோம்.... காவல் துறை விஜிய தீவிரவாதி அல்ல... ஒரு புரட்சிக்காரன் தான் என்று நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க.... உங்க சித்தப்பாவோட கூட்டாளிங்க எல்லாருமே கைது ஆகிட்டாங்க..... மேலும் விஜி விடுதலையாரதுக்கு உங்க நாட்குறிப்பு ஒரு முக்கிய சாட்சியா இருக்கப் போகுது... இன்னும் ரெண்டு மூணு நாள்ல விஜி வெளிய வர்றதுக்கு மிக நல்ல வாய்ப்பு இருக்கு....அதனால கவலைப்படாம இருக்கணும்"....
என்று ஆதரவாகப் பேசினார்....

அந்த நேரத்தில் அந்த கரிசனம் தேவைப்பட்டதாக இருந்ததால் மனம் நிம்மதி அடைந்தது......கூடவே விஜியின் விடுதலை வெகு தூரமில்லை என்ற செய்தியும் மனதிலே ஒரு துள்ளலை விதைத்திருந்தது......

அலைபேசியை அணைத்த அடுத்த நிமிடம்... அது மீண்டும்....

"முன்பே வா என் அன்பே வா...
ஊனே வா உயிரே வா...
முன்பே வா என் அன்பே வா....
பூப்பூவாய் பூப்போம் வா...".... என அழைக்க ஆரம்பித்தது....

'ம்.. யார் இது...?'

வந்த எண்ணும் மிகப் புதிதாக இருந்தது...

'பேசலாமா... வேண்டாமா..' என எண்ணிக் கொண்டிருந்த போதே... கைவிரல் அனிச்சையாக‌... அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டது....

"ஹலோ..." என விஷா சொல்வதற்கு முன்பே.. அவளை மேகமாக மிதக்க வைத்த‌து... அதில் கேட்ட குரல்....

"விஷா....."

ஆ... என் விஜியின் குரல்... விஜி.. விடுதலை ஆயாச்சா...? இப்பத்தானே தோழர் பரதன்... சொன்னார்.. அதுக்குள்ளேயா... என எண்ணிய படியே.. வார்த்தை வராமல் ஒரு பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தவளை அடுத்து விஜி கொஞ்சம் சத்தமாகச் சொன்ன....

"விஷா..." தான் இவ்வுலகிற்கு கூட்டி வந்தது....

கேட்பது கனவா இல்லை நினைவா... தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக் கொண்டாள் விஷா..

"ஹலோ... விஜி... எப்படி இருக்க...? விடுதலையாயாச்சா.... எப்ப... எங்கிருந்து பேசற...?" ... என்று படபடவென்று கேட்டுக்கொண்டே சென்றாள்...

"விஷா... இல்ல... இன்னும் விடுதலை ஆகல.. இப்ப ஜெயில்ல இருந்து தான் பேசறேன்... என்மேல கரிசனம் காட்டற ஒரு போலீஸ்காரரோட போன்ல இருந்து தான் உங்கிட்ட பேசிட்டு இருக்கேன்.... நேத்து ஒரு கெட்ட கனவு... அதான் உங்கிட்ட பேசணும்னு தோணுச்சு..."

"என்ன விஜி நீயுமா இப்படி.... கனவு கண்டுட்டு நல்லதா இருந்தா கொண்டாடு... கெட்டதா இருந்தா மறந்திடு"ன்னு நீதானே எங்கிட்டே அன்னிக்கொரு நாள் சொன்ன.... இப்ப நீயே இப்படி சொல்றியே..?"

"ம்... சரி சரி... அதவிடு... எப்படியும் இன்னும் ரெண்டு மூனு நாள்ல என்னை விடுதலை பண்ண எல்லா வாய்ப்பும் இருக்கு...."

"ம்....ம்.. இப்பத்தான் தோழர் பரதன்.. எங்கிட்ட போன்ல சொன்னார்...."

"அப்படியா... சரி.. சரி... நீ கொஞ்சம் என்னோட அம்மா.. அப்பாக்கிட்ட கொஞ்சம் பேசறியா... இப்பவே அவங்களுக்கு நம்மள‌ பத்திய விஷயம் ஓரளவு நல்லாவே தெரிஞ்சிருக்கும்... நான் சீக்கிரமா வெளியே வந்திடுவேன்.. அப்படீன்னு கொஞ்சம் ஆறுதலா பேசறியா..."

"என்ன விஜி... நீ சொல்லித்தான் நான் பேசணுமா என்ன...? எனக்குத்தெரியாதா... அவங்களோட தவிப்ப... உன் ப்ரண்டு ஆதி மூலமா.. எப்படியோ என் நம்பர வாங்கி செழியன் எங்கிட்ட பேசினான்.... அப்பவே நான் அவங்கள்ட்ட ஆறுதலா பேசினேன்.... அவங்களும் ரொம்ப அன்பாவே பேசினாங்க... இனிமே உனக்கு மட்டுமல்ல.. எனக்கும் தான் அவங்க... அப்பா.. அம்மா..."

"இத... இதத்தான் நீ சொல்வேன்னு... எனக்கும் தெரியும் விஷா... மிஸ் யூ டி..."

"மீ டூ .... மிஸ் யூ டா...."... என்று சொல்லியவாறே அணைக்கப் பட்ட போனையே பார்த்துக் கொண்டிருந்தாள் விஷா......

அடுத்த இரண்டு நாட்களும் அதிவிரைவு வண்டிப் பயணம் போல அடித்து பிடித்து ஓடியது....

அடித்தடுத்து நடந்து வரும் ஒவ்வொருய் முன்னேற்றமும் தோழர் பரதன் மூலமாக விஷாவிற்கு தெரிய வர ஆரம்பித்தது....

விஜியுடன் பேசுவதாக....பழகுவதாக... சிரிப்பதாக..... பஸ்ஸில் பயணிப்பதாக... ஒத்தையடிப்பாதையில் பூக்களின் மேல் நடப்பதாக... ஓடிப்பிடித்து விளையாடுவதாக... ஒத்திகை பார்த்தபடியே நேரத்தை கடத்திக் கொண்டிருந்தாள் விஷா.....

********************************************************************************************************************************************************

வழக்கறிஞர் லாரன்ஸ் எடுத்துச் சென்ற, விஷாவின் நாட்குறிப்பில்.... விஜியினால் எழுதப்பட்டு... பத்திரிக்கைகளில் வெளிவந்த பல கவிதைகளும், கதைகளும்... கத்தரித்து அழகாக ஒட்டவைக்கப்பட்டிருந்தது....
அதற்கான தேதிகளுடன்....

மேலும் எப்பொழுதெல்லாம் சந்தித்தார்களோ... அந்த தேதியில் பயணம் செய்த பயணச்சீட்டுகளும், கடையில் வாங்கிய பனிக்கூலின் பில்லும்... தெளிவான தேதியுடன் ஒட்டப்பட்டிருந்தது....

அந்த தேதிகளில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல்களில்.... இவர்கள் இயக்கம் ஈடுபட்டது... அதில் விஜியும் களத்தில் இருந்தான் என்ற காவல்துறையின் வாதம் இந்த சாட்சியங்களால் தவிடு பொடியானது.....

*******************************************************************************************************************************************************

விஜி... விஷாவென ஒரு ஆரம்பப்புள்ளியில் தொடங்கிய இந்த காதல்.... விஜியின் நண்பன் ஆதி, தம்பி செழியன்... அப்பா பாலா... அம்மா அம்சவர்தினி..., விஷாவின் அப்பா சுந்தரம், சுந்தரத்தின் நண்பர் சிவா.., சித்தப்பாவின் நண்பரான ரகு என்கிற ரகுபதி, கூலிப்படைத்தலைவன் கருணா, இயக்கத்தலைவர் பரதன், காவலர் வெங்கட், கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி... , வழக்கறிஞர் லாரன்ஸ்..... நான்கு அடியாட்கள் மற்றும் பேச்சுவாக்கில் இடம்பெற்ற விஜியின் நண்பர் ராஜ்குமார், சயனைடு கம்பெனி முதலாளி சந்தோஷ்குமார், ஏட்டு ஏகாம்பரம் போன்றோரின் பங்களிப்புடன் தொடர்ந்து... இப்பொழுது விஜி... விஷாவின் காதல்... ஒரு கமாவாக மாறியபடி...... முற்றுப்புள்ளியை நோக்கி..... நின்று கொண்டிருந்தது...

விஜி விடுதலை ஆனான்..... அன்றே ஊருக்குச் செல்ல அதே ரயில் ஏறினான்... அதே பெர்த்தின் டிக்கெட் வாங்கி காலியாக இருந்த தேவதையின் இடத்தை பார்த்த படியே..... விஷாவை சந்திக்கப்போகும் தருணத்தை சிந்தித்தவாறே பயணப்பட்டான்.....

நாளை விடியும் பொழுதில் நிகழும் சந்திப்பினை எண்ணியவாறே இரு நெஞ்சங்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தன....

விடியலை நோக்கி......

(அடுத்த பகுதியே கடைசி பகுதி....


இத்தொடரின் அடுத்த பகுதியை எழுத விரும்புவோர்.... தோழர் கவிஜியை தொடர்பு கொள்ள வேண்டாம்... ஏனெனில்..............)

(தொடரும்....)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Dec-15, 10:03 pm)
பார்வை : 205

மேலே