தமிழாலே ஈர்க்க

தமிழாலே ஈர்க்க

கதிரவனும் மேற்றிசையில் சாய –
கன்னியவள் காதலனை ஆய
மதியொளியும் நிலந்தனில் பாய
மன்னவன் மார்பில் சாய
வழிப் பார்த்திருந்தாள்!
விழி பூத்திருந்தாள்!

காலொலி செவிகளில் கேட்க
காளையவன் தழிழாலே ஈர்க்க
தோள்வலியோன் இருவிழியாள் பார்க்க
துடியிடையாள் நிலத்தினை நோக்க
கன்னம் சிவப்பேற – இரு
கனியிதழ்களும் வெளுத்தனவே!

சோலைக்குயில் மரத்தினிலே இரண்டு –அந்த
சோடிகளின் காதல்லீலைக் கண்டு
பாளைதனில் ஒளிந்தனவே ஒண்டி
அன்பு பெருக்கினாலே மனம்சுண்டி
நம்மைக் கவர்ந்தன-உடன்
தம்மை மறந்தனவே

மாலைமங்கும் பொழுதினில் மன்னன்! – முத்த
மழைகளைப் பொழிந்தாலோ கன்னல்
மாலையென மார்பில் படர்ந்தாள் – காதல்
மயக்கமதில் லீலைகளைத் தொடர்ந்தாள்
ஈருடலும் ஆங்கே – கலவியில்
ஓருடல் ஆனதுவே!


----கே. அசோகன்

எழுதியவர் : கே. அசோகன் (18-Dec-15, 8:10 pm)
பார்வை : 62

மேலே