புனிதத்தை தா
அந்த சிறுநண்டின் காகித ஓடம்
இன்று இருபத்தைந்து
வருடங்களாக காத்திருக்கிறது
கறை படிந்த நீரோட்டத்தில்
நனையாமலேயே
புரக்கேறிய வெள்ளம் என்னவோ
புனிதத்தை புரிந்துதோ இல்லையோ
மெதுவாக விலகிக் கடக்கிறது
பாவம் சிறு நண்டு
படம் கீறிக் கீறி கடந்து செல்கிறது
ஓடம் இன்னும் காத்துக் கொண்டே
கிடக்கிறது. ......
- பிரியத்தமிழ் -