எங்களூர்

**********
வசந்தத்தை எதிர்பார்த்து
வானம் நீலக்கடலைப் போர்த்தி
நிர்வாணத்தை
மறைத்துக் கொள்கிறது. .....
கொட்டிய கரு நிழல் மேக
கண்ணீரால் நெற்பயிர்
கொந்தளித்து வளர்ந்து
குமர்ப்பருவம் தாண்டி
குடலையாகி நிற்கிறது. .....
வெட்கமின்றி
வீதியோர இரு மருங்கில்
இளைப்பின்றி
இளைப்பாற இடம் கொடுக்க
இரு மரங்கள்
கச்சையை களற்றி
பச்சையாய் உடுத்தி
பார்த்து வரவேற்கிறது. .......
எங்கள் அழகு நிறை
எங்களூர்
எத்தனைபேர்களை
தத்தெடுத்து
வான்முட்ட வளர்த்து
விட்டிருக்கிறது. ......
எந்த ஊரென்ன - அது
எங்களூர் ஆகுமா. ..........?
- பிரியத்தமிழ் -