சாதனைக்குரியவர்கள்
பெற்றோர்களே! உறவுகளே!
மற்றும் பள்ளி, கல்லூரி பயிற்றுனர்களே!
பெற்ற பெண் குழந்தைகளை
சாதனைக்கு தயாராக்குங்கள்,
வேதனைக்கு வழிகாட்டாதீர்கள்,
என்னிரண்டு வயதிலிருந்தே,
சரியாக படித்தால் காலேஜ்
இல்லையேல் மேரேஜ்
என்று தவறான வழி தேடுகிறீர்களே!
சுற்றமும், பருவமடைந்தப்பின்
படிப்பு எதர்க்கு என்று தூபம் வேறு,
ஏன்?
பெண்குழந்தைகளுக்கு கட்டுப்பாடு கிடையாதா?
தற்காப்பு திடம் இல்லையா?
சாதிக்க முடியாதா?
வெற்றியின் உச்சத்தை தொட முடியாதா?
பல பெண்கள், மன வலிமையோடு
பல வெற்றிகளை குவித்துள்ளார்கள்,
மூவாறு வயதிலிருந்தே,
தேனாறாக அவள் காதில்
உயர் பதவிகளைச் சொல்லி
மன உறுதியை விருட்சமாக்குங்கள்,
அதில் அவள் பல வெற்றிக்கனிகளை
பறித்து தன் குடும்பத்தையும், நாட்டையும்
உயர்த்திப்பிடிப்பாள்,
இதையே சிலர்,
தன் ஆசையை பிள்ளையின் மீது
தினிப்பதாக பிதற்றுவார்கள்
அது தவறு,
தான் அடையாத உச்சத்தை
தன் பிள்ளை அடையட்டும் என்ற போராட்டம்,
எந்த ஆண் பிள்ளையிடமும்
மூவாறு வயதிலிருந்தே
திருமணத்தை பற்றி பேசுவதில்லை
பெண் பிள்ளைகளையே,
இவ்வாறு பேசி வழி தவற செய்கிறீர்கள்,
பெண்களும் சாதிக்க பிறந்தவர்கள்,
அவர்களுக்கு சாதனைகள் பல காத்திருக்கிறது,
பெற்றோரே! மற்றோரே! பயிற்றுனர்களே!
அவர்களை சிறு வயதிலேயே
வேதனை பக்கம் திருப்பாதீர்கள்,
தற்காலம் மட்டும் கிடைக்கும் சிறு மகிழ்ச்சியை காட்டி
பிற்கால நிரந்திர சந்தோஷத்தை
தொலைக்க வழிகாட்டாதீர்கள்
சிறு வயது திருமணம்,
சிறு வயதில் குழந்தை என்று,
வழி காட்டிவிட்டு,
வாழ்க்கை ஆரம்பிக்கும் வயதில்
அதை கசப்புணர்வுடன் இருக்க செய்யாதீர்கள்
பெண்களும் சதனையாளர்களே!
சாதிக்க வழிகாட்டுங்கள்!!!