வலி
காதல் விதைத்தவளே...
என் கருத்தில்
நிலைத்தவளே...
கண்கள் திறந்துப்
பார்க்குந்தருணம்
கனவாய் கலைந்ததும் ஏன்?
பெண் பூவாய்
ஜனித்தவளே...
பொன் பாவாய்
ஜொலித்தவளே...!
உச்சிப் பொழுது
கடக்கும் முன்னம்
உதிர்ந்து விழுந்ததும்
ஏன்?!...
குளிர்தென்றல் தீயானால்
பூக்கள் தாங்கிடுமா?
தளிர் கொழுந்தில்
தாமிரம் வார்த்திடில் தப்பி
பிழைத்திடுமா?!
காலந்தோறும் உன்னை
காண ஏங்கிய விழிகளில்
கந்தகம் பாய்ச்சினாய்
நியாயமா?!...

