அன்றும்இன்றும்ஆயிரம் மாற்றங்கள்

போக்கிலே தூவினாய்
உனது பார்வையை
பூக்களிலே குளித்தேன் நான்!

பெற்றவளுக்குத் தெரியாது
புத்துயிர் கொடுத்தது
நீயென்று!

என்னை நெஞ்சில் சுமந்தாள் என்தாய்!
உன்னை நெஞ்சில் சுமந்தேன் நான்!
நம்முள் நெஞ்சில் சுமக்கத்
தருவாயா
ஒரு புது உயிர்?!

அன்று
பெருமையில் கொட்டினோம் உணவைக்
குப்பைத் தொட்டிகளில்..
இன்று
கொட்டிய மழையால்
குப்பைத் தொட்டிகளில் கிடக்கிறோம்
உணவுக்காக..!

ஊழல் சாக்கடையைத்
தூர் வாரியிருந்தால்..
ஊரின் சாக்கடையில்
நின்றிருப்போமோ?

பெய்து ஓய்ந்தது
மேகம்
பெய்தும் ஓயாதது
எங்கள் முகம்!

இலவசமாய் வருகிறேன்
என்று வந்தது மழை..
இனி
இலவசங்களைத் தழுவோம்
என்று சொல்லும்வரை!

பெய்தது போதும்
மேகமே! போய்வா!
இனி எம்
கைகளும் வரையாது
உன்னைக் கண்டிப்பாய்!
**** ******

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (21-Dec-15, 9:42 pm)
பார்வை : 88

மேலே