காதல் செய் காதலியே

என் கண்கள்
வாசிக்கும்
கவிதை புத்தகம் நீ

சில நேரம்
நீ சிதறிவிட்டு போகும்
சிரிப்புகள் கூட
சிறந்த கவிதைகளாகின்றன
என் இதய வலைதளத்தில்

திட்டி விட்டு செல்கிறாய்
தித்திப்பாக தான்
இருக்கிறது அந்த வலியும்


திரும்பி பார்கிறாய்
உயர்கூட்டுக்குள் இருக்கும்
காதல் அணுக்கள் மட்டும்
கைகுலுக்கி கொள்கின்றன


நீ குடித்து விட்டு வைத்த
தேனீர் கோப்பைக்குள்
வேனுமென்றே விழுந்து
மடிகின்றன ஈக்கள்
தேவதை பருகிய
தீர்த்தம் என்று

உன் பின்னால்
வரும் பொழுதெல்லாம்
நீள வேண்டும்
பயணம் என்று
நினைக்கும் போதே
வந்து விடுகிறது
அந்த கடைசி வளைவும்

தோற்று கொண்டே
இருப்பதிலும்
ஒருவித சுகம் இருக்கிறது
உன்னிடம் மட்டும்

என் தியாண மண்டபத்தின்
அமைதியினை
அணைக்கிறது
நீ ஏற்றிய தீபம்

தெரியாமல் கூட
காஷ்மீரில் கால்
வைத்து விடாதே
பிரசித்த பெற்ற
காதல் ரோஜாக்கள்
பொறாமையில்
பூக்காமலே போய்விடும்

பிரம்மனின்
முதல் விதி
இனி பிரபஞ்சத்துக்கு
சந்திரனே தேவையில்லை
சகியே!! நீயே போதும்


உனக்கான மவுனத்தில்
ஒளிந்து கிடக்கிறது
நமக்கான வாழ்வு

அழகுக்கு அகராதி
கோர்க்கும் அதிசயமே
விழிகளில் வடியும்
விஷத்தையும் வேசத்தையும்
கலைத்து விட்டு


இரு கண்களின்
வழியே இருதயம் இறங்கு

காதலை
காட்டுதீயென பரப்பு

இடைவெளியின்றி
இறுக்கி அணை

போதும் போதும்
என்று புலம்பும் வரை
முத்தத்தால் மூச்சடக்கு
முக்தி பெறட்டும் இப்பிறப்பு...♥

எழுதியவர் : வேலு வேலு (22-Dec-15, 1:41 am)
பார்வை : 93

மேலே