மறுபக்கம்

மறுபக்கம் மறுபக்கம்
விழுந்திடும் பிம்பங்கள்
முகப்பக்கம்
தெரிவதுமில்லை!
கருத்தினைக் குழப்பும்
மாயை தாண்டி மனமது
செல்வதுமில்லை...!
இருபக்கம் சமமென
வாய்த்திடில் பாரினில்
அவனுக்கவனே எல்லை!!!
மாசு படிந்த
கண்ணாடியதுவும்
முகந்தனை நன்றாய்
காட்டிடுமோ?!
முனையது மழுங்கிய
உளியும் கற்சிலையதை
பொலிவாய்
ஆக்கிடுமோ?!
மைகாய்ந்த
தூரிகையதுவும்
நல்சித்திரம்தனை
தீட்டிடுமோ?!
எண்ணத்தில் புதைந்த
வக்கிரம் மறைத்து நீ
நடிப்பதும் என்ன
ஜாலமோ?!...
யதார்த்தமென்னும்
எல்லைத்தாண்டி ஏகாந்தம்
நாடும் ஒருபுறம்...
மறுபுறம் தேங்கிய
அழுக்கு மறைத்து
மினுங்கி சொலித்திடும்
வெளிப்புறம்...
மனமது தாங்கிய
ரணங்களும் வலிகளும்
மறைத்து சிரித்திடும்
மானிடா...
ஜகந்தனில் பிறந்து
அகமதைவுணர்ந்து
வாழும் தெய்வம் நீயடா...!
கடவுளும் அரக்கனும்
உன்னிருபாதி அதை நீ
மாற்றிட முடியாது...
காசுதேடும் மின்னல்
ஓட்டத்தில் கடவுள்
வாழ்வதும் கிடையாது...!
காலமும் கர்மமும்
ஆக்கிடும் வெளியில்
ஆள்வதும் யார் நீயே
சொல்...
தீவினில் மூண்டிட்ட
தீயதாய் நீயும் தீமையை
சுட்டிட விரைந்துச்
செல்!!!

எழுதியவர் : Daniel Naveenraj (22-Dec-15, 10:47 am)
Tanglish : MARUPAKKAM
பார்வை : 63

மேலே