வந்த வழி தானறியா நம் சிந்தை வழி வருங் காமம் - - - சக்கரைவாசன்

வந்த வழி தானறியா சிந்தை வழி வருங் காமம்
**************************************************************************
வந்த வழி தானறியா (நம்)சிந்தைவழி வருங் காமம்
மொந்தை புகு கள் ஆக உந்துவழி ஊர்ந்தவிழ்ந்து
சந்து வழி நேர்ந்திடவே , மோட்ச வழி காண்பதற்காய்
அந்த வழி அறியாது விந்துவழி வெளியேற --- நம்
சொந்தவழி நொந்தவிழ்ந்து பந்த வழி அறுப்பாரே !!
******************************

( இப்புனைவில் முதல் நான்கு வரிகள் அருவமாம் காமத்தின் நிலையும் செயலும்
எண்ணத்தில் கொள்ளப்பட்டது . ஐந்தாவது வரி உருவமாம் காமம் ஆட்படுத்தும்
மனிதனுடைய நிலை அதாவது காமத்தால் ஆளப்பட்டதால் நேரும் விளைவு எண்ணத்தில்
கொள்ளப்பட்டது .சந்து வழி என்பது சரியான வழி அல்லாத தகாத வழியில் காம உறவு எனக்
கொண்டோம். சொந்தவழி ...... எனும் வரி மனிதனின் மேற்கண்ட செயலால் உற்றார்
உறவினர்கள் உறவினை முறித்துக்கொள்வார்கள் எனும் கருத்தில் புனையப்பட்டது )

எழுதியவர் : சக்கரைவாசன் (22-Dec-15, 1:20 pm)
பார்வை : 123

மேலே