தெய்வீக நட்பு
நண்பனே !!!!
எண்ணற்ற எண்ணங்களை
எண்ணி உள்ளோம் இருவரும்
ஒன்று போல்
அது நட்பல்ல
கலை பற்றியும் கவிதை பற்றியும்
கருத்துகள் கலந்தோம்.
அது நட்பல்ல
காதலையும் கலவியையும்
கலந்து உரையாடும் போது
கட்டுப்பாடு மீறவில்லை
அது நட்பல்ல
உன் குடும்பம் என் குடும்பம்
அறிமுகம் ஆகாமலே
அக்கறை எடுத்து கொண்டோம்
அது நட்பல்ல
எது தான் நட்பு? என விழி
விரித்த என் நண்பனே!!!!
எண்ணம் கலை கவிதை
காதல் கலவி குடும்பம் என
எப்பொழுதும்
எது பற்றி பேசும் பொழுதும்
உன்னுள் நான் உணர்ந்த
பாதுகாப்பு ----- அதுவே தெய்வீக
நட்பு.....