மனதின் மாயம்
மனதின் மாயம்
தனிமைதான்
வாட்டுது!
தாராளமாய்
சிரிக்கிறான்!
ஒன்றுமில்லாதற்கெல்லாம்…?
தூக்கமோ
தூக்கலாய் அதிகம்!
சொந்தமாவதோ
சோகங்கள் ?
குறைவாயும்…
விரைவாயும்
பேசுகிறான்
இரகசியம் மட்டும்
இரகசியமாய்
தங்கியதே அவனிடம் ?
உணவோ….
உண்கிறான் அதிகமாய்
பதட்டமும் அல்லவா
பற்றிக் கொள்கிறதே ?
அழுகிறான்
தொட்டாற்சிணுங்கியாய்….
மென்மையும்…வெகுளியாய்
அவன் …..?
அற்பத்திற்கே
அதிக கோபம்
அன்புதான் தேவை
அவனுக்கே….?
எல்லாமே
மனதின்
மாயங்கள்தான்…..?
--- கே. அசோகன்.
நன்றி – திரு அருள்சோதி
ஆங்கில பகிர்வு