பரிகசித்த இந்த உலகம்
ஊடலுக்கு உச்சம் சினம்.
உன் மீது கொண்ட காதலின்
உச்சம்மாயே இந்த நிலை.
காதலுக்கு ஊடல் ஒன்றும்
புதிதல்லவே.
மலர் மணம் பரப்பி நிற்கும்
கானகக் காற்றுவெளியில்
கண்கசக்கித் தேடி நின்றேன்,
உன் வார்த்தை வாசகங்களின்
வாச உணர்வுகளை.
ஏக்கத்தின் வெளிப்பாடுகளே
இந்த தாக்கங்கள்.
மன்னிக்க தேவை மனம்.
மற்றோமுறை மணம் கலக்க
உத்திரவாதம் உரைக.
அலி என்றுரைத்த இந்த அகில அவலத்திடை
அன்பு மலர் சொரிந்த உன் கானகத்தில்
மட்டுமே நடைகொள்ளும் என் இந்தக் கால்கள்.
இங்கு,
இன்னொரு மலர் மலர அனுமதியில்லை.